How to Safeguard WiFi Network Tamil News : கோவிட் -19 தொற்றுநோய் பெரும்பாலான மக்களை வீட்டிலிருந்து வேலை செய்யக் கட்டாயப்படுத்தியது. இது, வீட்டு நெட்வொர்க்குகளில் நம்பகத்தன்மையை அதிகரித்தது. வீட்டிலிருந்து அதிகமானவர்கள் பணிபுரிவதால், வைஃபை நெட்வொர்க்கை பாதுகாப்பாக வைத்திருப்பது இப்போது மிக முக்கியமாக மாறி வருகிறது. உங்கள் வீட்டு வைஃபை பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் மனதில் கொள்ளக்கூடிய ஐந்து உதவிக்குறிப்புகளை சைபர் பாதுகாப்பு நிறுவனமான சோஃபோஸ் (Sophos) பட்டியலிட்டுள்ளது. அவற்றை இங்கே பார்க்கலாம்.
வழக்கமான புதுப்பிப்புகள் (Regular updates)
சோஃபோஸின் கூற்றுப்படி, வீட்டில் உபயோகிக்கும் நெட்வொர்க்கில் யாராலும் புறக்கணிக்க முடியாத பாதுகாப்பு அம்சம். ஆனால், இதை நாம் மறந்துவிடுகிறோம். உங்கள் தொலைபேசிக்கு மென்பொருள் அல்லது பாதுகாப்பு புதுப்பிப்பு தேவைப்படுவதைப் போலவே, உங்கள் வைஃபைக்கும் பாதுகாப்பு இணைப்பு தேவை. பயனர்கள் கடைசியாக ரவுட்டரின் ஃபார்ம்வேரை புதுப்பித்ததை சரிபார்க்க வேண்டும் என்று நிறுவனம் கூறுகிறது.
மேலும், பயனர்கள் சாதனத்தில் தானாகப் புதுப்பிப்புகளை (auto-updates) இயக்க வேண்டும். நீங்கள் சாதனத்தைப் புதுப்பிக்க முடியாவிட்டால், அதைச் சிறந்த மற்றும் சமீபத்திய அப்டேட்டை மாற்றுவது நல்லது என்று சோஃபோஸ் கூறுகின்றனது.
குறியாக்க அமைப்புகள்
WPA2-PSK குறியாக்கத்தை அனைவரும் நிச்சயம் பயன்படுத்த வேண்டும் என்று பாதுகாப்பு நிறுவனம் கூறுகிறது. அதாவது, WPA2-க்கு Wi-Fi பாதுகாக்கப்பட்ட அணுகல் குறுகியதாகவும், PSK-க்கு முன் பகிரப்பட்ட விசை குறுகியதாகவும் உள்ளது. உங்கள் வயர்லெஸ் டேட்டாவை, ரவுட்டர் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட சாதனங்களுக்கு இடையில் கடத்தும்போது அதனை மற்றவர்கள் அணுகுவதைத் தடுக்கிறது. WPA2 அல்லது WEP குறியாக்க முறையைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் நிச்சயம் மேம்படுத்தவேண்டும்.
வலுவான கடவுச்சொல் (Strong password)
உங்கள் வைஃபை நெட்வொர்க்கின் கடவுச்சொல்லுக்கு, நினைவில் வைத்துக் கொள்வதற்கு எளிதாக இருக்குமென நினைத்து உங்கள் பிறந்த தேதி அல்லது உங்கள் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். யாருக்கும் யூகிக்கக் கடினமாக இருக்கும் ஒரு கூட்டு எழுத்துக்களைத் தேர்ந்தெடுங்கள் என்று சைபர் பாதுகாப்பு நிறுவனம் கூறுகிறது.
வெளியாட்களைத் தவிர்க்கவும்
உங்கள் வைஃபை நெட்வொர்க்கின் வேகத்தில் சரிவை நீங்கள் சந்தித்திருந்தால் அல்லது எதிர்பார்த்ததை விட அதிகமான அளவு டேட்டா செலவாகியிருந்தால், உங்கள் நெட்வொர்க்கை வேறு யாராவது பயன்படுத்துகிறீர்களா இல்லையா என்பதைச் சரிபார்க்க வேண்டும். பெரும்பாலான ரவுட்டர்கள், பயனர்கள் தங்கள் மேலாண்மை பக்கங்களை ஆன்லைனில் அணுகுவதற்கான விருப்பத்தை வழங்குகின்றன. நெட்வொர்க்கில் ஏதேனும் அறியப்படாத சாதனங்களைக் கண்டால், புதிய கடவுச்சொல்லை அமைப்பதன் மூலம் அவற்றைத் துண்டிக்கவும்.
ஸ்மார்ட் பயனராக மாறுங்கள்
தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துடன் பல விஷயங்கள் ஸ்மார்ட் ஆகும்போது, பயனரும் ஸ்மார்ட்டாக மாறுவது அவசியம். பயன்பாட்டில் இல்லாதபோது ஸ்மார்ட் சாதனங்களை அணைப்பது, அவற்றை ஒழுங்காக உள்ளமைப்பது, தொடர்ந்து புதுப்பிப்பது, தேவைப்பட்டால் அமைப்புகளை மாற்றுவது மற்றும் நீங்கள் பகிர்வதை சரிபார்ப்பது உள்ளிட்ட செயல்கள் அவசியம். மேலும், நீங்கள் அவர்களை ‘விருந்தினர்’ நெட்வொர்க்கிலும் இணைக்க முடியும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.