பேஸ்புக்கின் நியூஸ் ஃபீட் பக்கத்தில் இடம்பெறும் போஸ்ட்களை யூசர்களே தீர்மானிக்கலாம்!

நீங்கள் சில செட்டிங்கை மாற்றினால் போதுமானது.

கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் ஃபேஸ்புக் செயலியின் நியூஸ் ஃபீட் பக்கத்தில் அதிகம் இடம்பெற வேண்டிய போஸ்டுகளை யூசர்களே இனி  தேர்வு செய்துக் கொள்ளலாம்.

நாடு முழுவதும் கோடிக்கணக்கான யூசர்களை கொண்டுள்ள ஃபேஸ்புக் செயலின் நியூஸ் ஃபீட் பக்கம், அனைருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. இந்த பக்கத்தில் இடம்பெறும் வீடியோக்கள், வைரல் செய்திகள், நண்பர்களின் ஃபோட்டோக்கள் என ஒவ்வொன்றையும் யூசர்கள் பார்த்து, அவை பிடிந்திருந்தால் லைக், சேர், கமெண்ட் செய்வார்கள்.

சென்ற ஜனவரி மாதம், பேஸ்புக் நிறுவனர் மார்க், தனது ட்விட்டர் பக்கத்தில், இனி வரும் காலங்களில் ஃபேஸ்புக்கின் நியூஸ் ஃபீட் பக்கத்தில் புதிய மாற்றங்கள் வரவுள்ளதாக தெரிவித்திருந்தார். இதன்படி, நியூஸ் ஃபீட்  பக்கத்தில் இனிமேல் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் புகைப்படங்கள், அவர்கள் குறித்த வீடியோக்கள், லைவ் வீடியோ போன்றவை அதிகளவில் இடம்பெறும் என்றும், தனியார் செய்தி நிறுவங்களின் வீடியோக்கள், விளம்பரங்கள் இடம் பெறுவது குறையும் என்று அறிவித்திருந்தார். மார்க்கின் இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு அளித்திருந்தனர்.

, ஃபேஸ்புக்கில், நமக்கு மிகவும் பிடித்த பேஸ்புக் பக்கத்தை நாம் ஃபலோ செய்தால், அவர்கள் பகிர்ந்துக் கொள்ளும்  போஸ்ட்கள், வீடியோக்கள் ஆகியவற்றில் ஒரு சிலவை மட்டும் நம்முடைய நியூஸ் ஃபீட் பக்கத்தில்  காட்டும். இதன்படி நாம் நூறுக்கும் மேற்பட்ட பேட்ச்களை பின் தொடர்ந்தால், அவர்கள் பதிவிடும் அனைத்தும் இடம்பெறாமல், குறிப்பிட்ட சில போஸ்ட்கள் மட்டுமே காணலாம். இந்நிலையில் அவர்கள் பதிவிடும் அனைத்து போஸ்டுகளும் உங்களும் தெரிய வேண்டும் என்று  நீங்கள் நினைத்தால்,  சில செட்டிங்கை மாற்றினால் போது என்ற வகையில் ஃபேஸ்புக் பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நீங்கள் ஃப்வாலோ செய்யும் ஃபேஸ்புக் பக்கத்திற்கு சென்று, அதில் இருக்கும் ஃப்வாலிங்( Following) வசதியை கிளிக் செய்ய வேண்டும். அதில் சீ ஃபர்ஸ்ட்(See First) ஆப்ஷனை தேர்வு செய்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம், நீங்கள் பின் தொடரும் ஃபேஸ்புக் பேட்சில் பதிவிடப்படும் அனைத்து போஸ்டுகளையும்  உங்கள் நீயூஸ் ஃபீட் பக்கத்தில் பார்க்க முடியும்.  இதன் காரணமாக உங்களின் நியுஸ் ஃபீட் பக்கத்தில் நீங்கள் விருப்பப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்தின்  அனைத்து போஸ்டுகளும் வரிசையாக இடம்பெறும்.

×Close
×Close