Whatsapp Christmas and News Year Stickers Tamil News : வாட்ஸ்அப் ஏராளமான ஸ்டிக்கர் பேக்குகளை வழங்குகிறது. ஆனால், திருவிழா அடிப்படையிலான ஸ்டிக்கர்களுக்கு, நீங்கள் மூன்றாம் தரப்பு பயன்பாடுகளைத்தான் பயன்படுத்த நேரிடும். கிறிஸ்துமஸ் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அவர்கள் விரும்பும் வகையில் படைப்பு அல்லது அழகான ஸ்டிக்கர்களை அனுப்புவதற்கான வழிகளை நீங்கள் இங்கே காணலாம். உங்களுக்கு எளிதாக்குவதற்கு, நாங்கள் சில மூன்றாம் தரப்பு வாட்ஸ்அப் ஸ்டிக்கர் பயன்பாடுகளை முயற்சி செய்தோம். அவற்றில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்துள்ளோம். விடுமுறை வாழ்த்துக்களை அனுப்ப நீங்கள் பயன்படுத்தக்கூடிய பயன்பாடுகளின் பெயர்களை நாங்கள் கீழே குறிப்பிட்டுள்ளோம். வாட்ஸ்அப்பில் சில வேடிக்கையான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஸ்டிக்கர்களை எவ்வாறு அனுப்பலாம் என்பது பற்றி மேலும் அறியப் படிக்கவும்.
வாட்ஸ்அப்: கிறிஸ்துமஸ் ஸ்டிக்கர்களை நண்பர்களுக்கு அனுப்புவது எப்படி
ஸ்டெப் 1: கூகுள் ப்ளே ஸ்டோருக்குச் சென்று வாட்ஸ்அப்பிற்காக கிறிஸ்துமஸ் ஸ்டிக்கர்களை டைப் செய்யுங்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2020/12/WhatsApp-stickers-1-300x221.jpg)
ஸ்டெப் 2: இப்போது நீங்கள் பல பயன்பாடுகளைப் பெறுவீர்கள். உங்கள் விருப்பப்படி எந்தவொரு பயன்பாட்டையும் தேர்வு செய்யலாம். ‘வாட்ஸ்அப்பிற்கான கிறிஸ்துமஸ் ஸ்டிக்கர்கள் (WaStickersApp)’ மற்றும் ‘கிறிஸ்துமஸ் ஸ்டிக்கர்கள் பேக் 2020 - WAStickersApps’ ஆகிய இரண்டு பயன்பாடுகளை நாங்கள் பதிவிறக்கம் செய்தோம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்குப் பலவிதமான கிறிஸ்துமஸ் ஸ்டிக்கர்களை அனுப்ப இந்த இரண்டு பயன்பாடுகளையும் பதிவிறக்கம் செய்யலாம். இந்த பயன்பாடுகளைப் பதிவிறக்கம் செய்தவுடன், அதனைத் திறக்கலாம். இப்போது நீங்கள் ஏராளமான கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் நன்றி ஸ்டிக்கர்களைக் காண்பீர்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2020/12/WhatsApp-stickers-300x221.jpg)
ஸ்டெப் 3: வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர்களைச் சேர்க்க, ஸ்டிக்கர்கள் விண்டோவின் மேல் வலது மூலையில் அமைந்துள்ள ‘+’ பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
/tamil-ie/media/media_files/uploads/2020/12/WhatsApp-stickers-3-300x221.jpg)
ஸ்டெப் 4: ஒரு சிறிய பெட்டியில் “XXXXX-ஐ வாட்ஸ்அப்பில் சேர்க்க விரும்புகிறீர்களா” என்று பாப் அப் ஆகும். நீங்கள் அதில் ‘ADD’ பட்டனை அழுத்த வேண்டும்.
/tamil-ie/media/media_files/uploads/2020/12/WhatsApp-stickers-4-300x221.jpg)
ஸ்டெப் 5: வாட்ஸ்அப் பயன்பாட்டில் புதிய கிறிஸ்துமஸ் ஸ்டிக்கர்களை இப்போது காண்பீர்கள். சரிபார்க்க, வாட்ஸ்அப்பைத் திறந்து, நீங்கள் அனுப்ப விரும்பும் நபரின் சாட்டை திறக்க வேண்டும்.
/tamil-ie/media/media_files/uploads/2020/12/WhatsApp-stickers-2-300x221.jpg)
ஸ்டெப் 6: தட்டச்சுப் பட்டியில் அமைந்துள்ள ஸ்மைலி ஐகானை அழுத்தவும். பின்னர் ஸ்டிக்கர்கள் பகுதிக்குச் செல்லவும். இங்கே, புதிய கிறிஸ்துமஸ் ஸ்டிக்கர்களை காண்பீர்கள்.