Sending emails with expiry date Tamil News : காலாவதி தேதியுடன் மின்னஞ்சல்களை அனுப்ப முடியுமா என்று யோசிக்கிறீர்களா? நிச்சயம் அது சாத்தியம் மற்றும் மின்னஞ்சல்களுக்குக் காலாவதி தேதியை அமைக்க சில நிமிடங்கள் மட்டுமே போதும். ஜிமெயிலில் ரகசிய பயன்முறையை கூகுள் வழங்குகிறது. இது, காலாவதி தேதியைச் சேர்க்க உங்களை அனுமதிக்கிறது. காலாவதி தேதிக்கு முன், பெறுநர் மின்னஞ்சலைப் பார்ப்பதைத் தடுக்கும் விருப்பத்தையும் ஜிமெயில் அளிக்கிறது.
காலாவதியான மின்னஞ்சல்கள் அனுப்புநரிடமிருந்து மறைந்துவிடாது. அதை அவர்கள் “அனுப்பிய” ஃபோல்டரில் காண்பார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அனுப்பிய மெயிலை வைத்திருக்க விரும்பவில்லை எனில், அனுப்புநர் காலாவதியான மின்னஞ்சலை கைமுறையாக நீக்க வேண்டும். மொபைல் மற்றும் கணினி வழியாக ஜிமெயிலில் செய்திகளையும் இணைப்புகளையும் ரகசியமாக அனுப்பலாம். காலாவதி தேதியை அமைத்த பிறகு, மின்னஞ்சலை ஃபார்வேர்டு செய்ய, நகலெடுக்க, அச்சிட அல்லது பதிவிறக்க விருப்பம் இல்லை. உங்கள் மின்னஞ்சல்களுக்கு காலாவதி தேதியை அமைக்க சில எளிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
ஜிமெயில்: காலாவதி தேதியுடன் மின்னஞ்சல்களை அனுப்புவது எப்படி
ஸ்டெப் 1: உங்கள் தொலைபேசியில் ஜிமெயிலைத் திறக்கவும்> எழுது> மூன்று-புள்ளி ஐகான்> ரகசிய பயன்முறையை க்ளிக் செய்யவும். கணினியில், ஜிமெயிலுக்குச் சென்று எழுது என்பதைக் கிளிக் செய்யுங்கள். விண்டோவிற்கு கீழ் வலது மூலையில், “ரகசிய பயன்முறையை இயக்கவும்” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 2: இப்போது, காலாவதி தேதியை 1 நாள் அல்லது 1 வாரம் அல்லது 1 மாதமாக அமைக்கலாம். மற்ற விருப்பங்களும் உள்ளன. ஆனால், நீங்கள் ஒரு காலாவதி தேதியை ஒரு மணி நேர அடிப்படையில் அமைக்க முடியாது.
ஸ்டெப் 3: நீங்கள் கடவுக்குறியீட்டையும் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு பயனர் “எஸ்எம்எஸ் கடவுக்குறியீடு இல்லை” என்பதைத் தேர்ந்தெடுத்தால், ஜிமெயில் பயன்பாட்டைப் பெறுபவர்கள் மின்னஞ்சலை நேரடியாகத் திறக்க முடியும். மேலும், எந்த கடவுக்குறியீட்டையும் உள்ளிட தேவையில்லை. ஜிமெயிலைப் பயன்படுத்தாதவர்கள் கடவுக்குறியீட்டை மின்னஞ்சல் செய்வார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
நீங்கள் “எஸ்எம்எஸ் கடவுக்குறியீட்டை” தேர்வுசெய்தால், பெறுநர்களுக்கு டெக்ஸ்ட் மெசேஜ் மூலம் கடவுக்குறியீடு கிடைக்கும். ஜிமெயில் பயனர்கள் பெறுநரின் தொலைபேசி எண்ணை உள்ளிடுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த படி முடிந்ததும், சேமி என்பதைக் கிளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள் மின்னஞ்சல் அனுப்பலாம்.
ஜிமெயில்: மின்னஞ்சலின் அணுகலை எவ்வாறு அகற்றுவது
காலாவதி தேதிக்கு முன் உங்கள் பெறுநரை மின்னஞ்சலைப் பார்ப்பதைத் தடுக்க கூகுள் உங்களுக்கு விருப்பத்தை வழங்குகிறது. தவறான சொற்கள் அல்லது தகவலுடன் நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் நேரங்கள் உள்ளன. இந்த அம்சம் உங்களை சங்கடத்திலிருந்து காப்பாற்ற உதவும். மின்னஞ்சலுக்கான காலாவதி தேதியை அமைத்த பின்னர் அணுகலை அகற்றுவதற்கான படிகளை அறிய தொடர்ந்து படிக்கவும்.
ஸ்டெப் 1: உங்கள் சாதனத்தில் ஜிமெயிலைத் திறந்து அனுப்பிய (sent) ஃபோல்டரை பார்வையிடவும்.
ஸ்டெப் 2: ரகசிய மின்னஞ்சலைத் திறந்து அகற்று அணுகலைக் கிளிக் செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"