உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ளன. மக்கள் வீடுகளிலும், வெளி ஊர்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றன. 2023 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்க மக்கள் உற்சாகமாக உள்ளனர். சமூகவலைதளங்கள் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மூலம் நண்பர்கள், உறவினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லி மகிழ்வர். அந்தவகையில் உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு புத்தாண்டு ஸ்டிக்கர் அனுப்பி வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாட்ஸ்அப்பில் புத்தாண்டு ஸ்டிக்கர் அனுப்புவது எப்படி?
வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர் அனுப்ப முதலில் ஸ்டிக்கர் பேக் (sticker packs) இன்ஸ்டால் செய்ய வேண்டும். ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோருக்குச் சென்று ஸ்டிக்கர் பேக் டவுன்லோடு செய்யலாம். New Year stickers என பிளே ஸ்டோரில் search செய்து டவுன்லோடு செய்யலாம். ஏராளமான stickers இருக்கும் உங்களுக்கு பிடித்தவற்றை டவுன்லோடு செய்யலாம்.
இப்போது, இதை வாட்ஸ்அப்பில் சேர்க்க வேண்டும். அதற்கு, ஸ்டிக்கர் பேக்கின் அருகில் உள்ள ‘+’ ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின் ‘add’ பட்டனை கொடுத்து இன்ஸ்டால் செய்யுங்கள். அவ்வளவு தான் இப்போது, வாட்ஸ்அப் சேட் பக்கத்திற்கு வந்துவிடுங்கள்.

வாட்ஸ்அப் சேட்டில் இமோஜி பட்டனை கிளிக் செய்யுங்கள். நீங்கள் இன்ஸ்டால் செய்ய ஸ்டிக்கர்கள் இப்போது இங்கு இருக்கும். இதை கிளிக் செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி மகிழலாம்.
இன்ஸ்டாவில் புத்தாண்டு ஸ்டிக்கர்கள்
இன்ஸ்டாகிராமில் புத்தாண்டு ஸ்டிக்கர்கள் அனுப்புவது வாட்ஸ்அப்பை விட எளிதானது. இதற்கு பயனர்கள் முதலில் இன்ஸ்டா சேட் பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில், Direct Messages பக்கத்திற்கு செல்லவும். அதில் உங்கள் டெக்ஸ்ட் (Text input) பக்கத்தில் ஸ்டிக்கர் ஐகான் கொடுக்கப்பட்டிருக்கும்.
voice-recording,image-attachment ஆப்ஷன் பக்கத்தில் வலப்புறத்தில் ஸ்டிக்கர் பட்டன் இருக்கும். இந்த பட்டனை கிளிக் செய்து ஸ்டிக்கர்-சர்ச் பாரில் ‘New Year’ or ‘2023’என டைப் செய்து விருப்பமான ஸ்டிக்கரை தேர்ந்தெடுத்து அனுப்பலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“