Now you can send a message From WhatsApp to person you want without Saving Number ,How to message On Whatsapp without saving Number: உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இன்ஸ்டன்ட் சாட்டிங் செயலியாக வாட்ஸ்அப் உருவெடுத்துள்ளது. நண்பர்களுடன் கலந்துரையாடவும், அலுவலக பணிக்காகவும் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும், வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்திட, சம்பந்தப்பட்ட நம்பரை நமது செல்போனில் செவ் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. பல நேரங்களில், நம்பர் செவ் செய்து மெசேஜ் அனுப்புவது விருப்பமிருக்காது அல்லது யாருக்காவது அவரசமாக மெசேஜ் அனுப்ப வேண்டிய கட்டாயம் இருக்கும்.
அத்தகைய சூழ்நிலையில் எண்களை சேவ் செய்யாமல் வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் செய்வது எப்படி என்பதை இங்கே காணலாம்.
- முதலில் உங்கள் மொபைலில் பிரவுசரை ஓப்பன் செய்து, அதில் http://api.whatsapp.com/send?phone=xxxxxxxxxx என்ற இந்த லிங்கை ஓபன் செய்துகொள்ளுங்கள்.
- xxxxxxxxxx என்ற இடத்தில் நீங்கள் மெசேஜ் அனுப்ப விரும்பும் நம்பரை கவனமாக என்டர் செய்யுங்கள். உதாரணமாக http://wa.me/919000000000 என்று பதிவிட வேண்டும்
- லிங்க் என்டர் கொடுத்ததும், உங்கள் திரையில் Continue to Chat என்று பச்சை நிற பட்டன் தோன்றும். அதனை அழுத்த வேண்டும்.
- அவ்வளவு, உங்கள் வாட்ஸ்அப் கணக்கு திறக்கப்பட்டு, அந்த நம்பருக்கு மெசேஜ் அனுப்பும் பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.
- இப்போது, நீங்கள் அந்த நம்பருக்கு மெசேஜ் டைப் செய்துகொள்ளலாம்.
குறிப்பு: நீங்கள் இந்திய வாட்ஸ்அப் பயனர் என்றால் கட்டாயம் 91 என்ற எண்ணை நீங்கள் என்டர் செய்யும் போன் எண்ணிற்கு முன்னாள் சேர்க்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil