பாஸ்வேர்ட் ப்ரீ எதிர்காலத்தை நோக்கி தொழில்நுட்ப நிறுவனங்கள் நகர்ந்து செல்லும் நிலையில், இ-காமர்ஸ் தளமான அமேசான் தனது ப்ரௌசர் ( Browser) மற்றும் செயலியில் பாஸ்கீஸ் லாக்-கின் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
பாஸ்வேர்ட் இல்லாமல் எளிமையாக பயோமெட்ரிக்ஸ் மூலம் (face/fingerprint scan or PIN) பயன்படுத்தி லாக்-கின் செய்யலாம்.
அமேசான் பாஸ்கீஸ் எப்படி பயன்படுத்துவது?
1. முதலில் அமேசான் ப்ரௌசர் அல்லது ஐபோனில் அமேசான் ஆப் செல்லவும்.
2. ‘Your Account’ சென்று ‘Login & security’ என்பதை செலக்ட் செய்யவும்.
3. பாஸ்கீஸ் என்று இருக்கும் அதின் அருகில் ‘Set up’ ஆப்ஷனை கொடுக்கவும். அவ்வளவு தான் அடுத்து வரும் தகவல்களை கொண்டு face/fingerprint scan கொண்டு பாஸ்கீஸ் செட் செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“