/indian-express-tamil/media/media_files/XBVSsSifMvkLnmjrpSSn.jpg)
கூகுள் பே, இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் பேமெண்ட் ஆப் ஆகும். பணப் பரிவர்ததனை முதல் ரீசார்ஜ் வரை அனைத்தும் ஒரே ஆப் மூலம் செய்யலாம். குறிப்பாக இதில் ரிமைண்டர் செட் செய்து கொள்ளலாம். மின்சார கட்டணம், வாடகை கட்டணம் போன்ற மாத கட்டணங்கள் செலுத்துவது குறித்து உங்களுக்கு நினைவூட்டும். அந்த வகையில் கூகுள் பே-ல் பேமெண்ட் ரிமைண்டர் செட் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
1. கூகுள் பே ஓபன் செய்து கீழே scroll செய்து Bills, Recharges ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
2. பேமெண்ட் செக்ஷனில் Regular Payments ஆப்ஷன் கொடுக்கவும்.
3. இப்போது mode செலக்ட் செய்யவும்.
4. அடுத்து Payee என்பதை கொடுக்கவும்.
5. இப்போது தொடக்க தேதி, frequency of payment மற்றும் செலுத்த வேண்டிய தொகையை கொடுக்கவும். விருப்பபடி பேமெண்ட்களுக்கு பெயர் வைத்துக் கொள்ளலாம்.
6. கடைசியாக Set Reminder எனக் கொடுத்து முடிக்கவும்.
குறிப்பு: இது ரிமைண்டர் மட்டுமே இதன் மூலம் பணம் ஆட்டோ- பேமெண்ட் செய்யப்படாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.