Two-Factor Authentication for Gmail Tamil News : 1.5 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட ஜிமெயில் உலகின் மிகவும் பிரபலமான மின்னஞ்சல் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ஆனால் சில மோசமானவர்களால், மின்னஞ்சல் ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்பு எப்போதும் உண்டு. வலுவான கடவுச்சொற்கள் இருந்தாலும் மின்னஞ்சல் கணக்கைப் பாதுகாக்க, இரண்டு காரணி அங்கீகாரம் (two-factor authentication) கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. கவலைப்பட வேண்டாம், ஜிமெயிலுக்கு 2-ஸ்டேப் மற்றும் தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை இனி பார்க்கலாம்.
கூகுள் கணக்கிற்கு 2 ஃபேக்டர் அங்கீகாரத்தை எவ்வாறு அமைப்பது
உங்கள் கணக்கிற்கான 2 ஃபேக்டர் அங்கீகாரத்தை, கூகுள் ப்ராம்ட் மற்றும் கூகுள் ஆதென்ட்டிக்கேட்டர் செயலி ஆகிய இரண்டு வழிகளில் அமைக்கக் கூகுள் உங்களை அனுமதிக்கிறது.
# உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது கணினியில் ,myaccount.google.com-ல் உள்ள கூகுள் கணக்கில் உள்நுழைக
# இடதுபுறத்தில் பாதுகாப்பு டேப்பை க்ளிக் செய்க
# கொஞ்சம் கீழே ஸ்க்ரோல் செய்து, “2-ஸ்டேப் வெரிஃபிகேஷன்" என்பதைக் க்ளிக் செய்க
# ஸ்டார்ட் பட்டனை க்ளிக் செய்து, 2 ஃபேக்டர் அங்கீகாரத்தை அமைக்கத் திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்
# உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தக் கடவுச்சொற்களை உள்ளிடவும்
# க்ளிக் செய்து இப்போது முயற்சி செய்யவும்
# ஆறு இலக்க சரிபார்ப்புக் குறியீட்டைக் கூகுள் அனுப்பக்கூடிய தொலைபேசி எண்ணைச் சேர்க்கவும்
# 'அனுப்பு' என்பதைக் க்ளிக் செய்க
# கூகுள் உங்களுக்கு அனுப்பிய ஆறு இலக்கக் குறியீட்டை உள்ளிட்டு உங்கள் தொலைபேசி எண்ணைச் சரிபார்க்கவும். தொடர்ந்து, 'அடுத்து' என்பதைக் க்ளிக் செய்க.
# 2 ஃபேக்டர் அங்கீகாரத்தை இயக்க, 'இயக்கவும்' என்பதைக் க்ளிக் செய்யவும்
How to set two factor authentication for Gmail in android phones
கூகுள் ஆதென்ட்டிக்கேட்டரை எவ்வாறு பயன்படுத்துவது
உங்கள் கூகுள் கணக்கைப் பாதுகாக்க மற்றொரு வழி கூகுள் ஆதென்ட்டிக்கேட்டர். இந்த முறையைப் பயன்படுத்த, உங்கள் 2 ஃபேக்டருக்கான சீரற்ற குறியீடுகளை உருவாக்கப் பயன்படும் ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து இலவச செயலியைப் பதிவிறக்க வேண்டும்.
# உங்கள் கணக்கின் பாதுகாப்பு விருப்பங்களுக்குச் சென்று, ஆதென்ட்டிக்கேட்டர் பயன்பாட்டைக் க்ளிக் செய்க
# நீங்கள் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துகிறீர்களா என்பதைத் தேர்வுசெய்க
# 'அடுத்து' க்ளிக் செய்க
# உங்கள் ஆதென்ட்டிக்கேட்டர் பயன்பாட்டிலிருந்து QR குறியீட்டை ஸ்கேன் செய்யுங்கள்
# உங்கள் ஸ்மார்ட்போனில் Google Authenticator பயன்பாட்டில் காட்டப்பட்டுள்ள குறியீட்டை உள்ளிடவும்
# 'சரிபார்க்க' ஆப்ஷனை க்ளிக் செய்க
# 'முடிந்தது' ஆப்ஷனை க்ளிக் செய்யவும்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"