வெளியில் செல்லும் போது ஆதார், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்ற அரசின் ஆவணங்களை தவறுதலாக வீட்டில் மறந்து வைத்துவிட்டால் பயப்பட வேண்டாம். ஒரிஜினல் ஆவணங்களை வாட்ஸ்அப் மூலம் அப்படியே பெறலாம்.
மத்திய அரசின் MyGov அல்லது DigiLocker என்ற பெயரில் வாட்ஸ்அப்-ல் டிஜிலாக்கர் சேவைகளைப் பெறலாம். இதில் எளிதாக இந்த ஆவணங்களை டவுன்லோடு செய்யலாம். எப்படி என்று பார்ப்போம்.
1. முதலில் MyGov வாட்ஸ்அப் ஹெப்லைன் நம்பரை Save செய்யவும். 9013151515 என்ற MyGov அல்லது DigiLocker எண்ணை உங்கள் போனில் பதிவு செய்யவும். 2. அடுத்து வாட்ஸ்அப் பக்கம் வந்து இந்த எண்ணை தேடி எடுத்து அந்த ஷேட் பக்கம் வரவும். அங்கு “Hi” என டைப் செய்து அனுப்பவும்.
3. இப்போது வணக்கம் எனத் தெரிவித்து டிஜிலாக்கர் சேவைகளை உங்களிடம் காண்பிக்கும். டிஜிலாக்கர் சேவைகளை கிளிக் செய்த பின், உங்களிடம் டிஜிலாக்கர் அக்கவுண்ட் உள்ளதாக என்று கேட்கும். இருந்தால் ஆம் எனக் கொடுக்கவும். இல்லையென்றால் நோ கொடுக்கவும். 4. அடுத்தாக உங்கள் டிஜிலாக்கர் சேவைகளை உறுதி செய்ய உங்களுடைய 12 இலக்க ஆதார் எண் கேட்கப்படும். அதைக் கொடுக்கவும். இப்போது உங்கள் எண்ணிற்கு ஓ.டி.பி அனுப்பபடும் அதை கொடுக்கவும்.
5. இப்போது உங்களுடைய ஒரிஜினல் ஆவணங்கள் என்ன உள்ளது என்று காண்பிக்கும். அதில் உங்களுக்கு என்ன தேவை என்பதை அதில் உள்ள வரிசை எண் படி, 1,2 அல்லது 3 எனக் கொடுத்தால் இப்போது ஆவணம் உங்களுக்கு பி.டி.எஃப் வடிவில் கிடைக்கும்.
இது அரசின் அதிகாரப்பூர்வ டிஜிலாக்கர் சேவை, வாட்ஸ்அப் சாட்போட் என்பதால் ஆவணங்களின் பாதுகாப்பு பற்றி கவலையடைய தேவையில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.