How to share your location on WhatsApp using iPhone or Android phone : கொரோனா ஊரடங்கு காலத்தில் நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு முக்கிய புள்ளியாக டிஜிட்டல் தளங்கள் செயல்பட்டு வருகிறது. நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்கள் என அனைவரையும் தினமும் சந்திக்க பேச தகவல்களை பரிமாறிக் கொள்ள நிச்சயமாக வாட்ஸ்ஆப் தளம் பேருதவியாக இருக்கிறது.
பலரும் இதனை வீடியோ மற்றும் ஆடியோ கால்கள் மற்றும் குறுஞ்செய்திகளுக்காகவே பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இதனை பயன்படுத்தி நம்முடைய தற்போதைய லொகேசன் என்ன என்பதையும் பகிர முடியும். ஆனால் இது பலருக்கும் தெரியாது. நீங்கள் எங்கே சென்று வருகிறீர்கள் என்பதை உங்களின் குடும்பத்திற்கு தெரிவிக்க இது ஒரு பாதுகாப்பான வழியாகும். இதனை நீங்கள் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஃபோன் மூலமாகவும் தெரியப்படுத்திக் கொள்ளலாம்.
லோகேசனை ஐபோன் வாட்ஸ்ஆப் மூலம் ஷேர் செய்வது எப்படி?
சாட் என்ற என்ற ஆப்சனை தேர்வு செய்யவும்.
யாருக்கு நீங்கள் லோகேசனை ஷேர் செய்ய வேண்டுமோ அவரின் இன்பாக்ஸை தேர்வு செய்யுங்கள்
திரையின் இடது கீழ் பக்கம் கூட்டல் குறியீடு இருக்கும்.
அதனை க்ளிக் செய்து லோகேசனை தேர்வு செய்யவும்
அதில் ”“Send Your Current Location” அல்லது “Share Live Location” என்ற ஏதாவது ஒரு ஆப்சனை தேர்வு செய்து அனுப்பவும்.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
ஆண்ட்ராய்ட் போன்களில் எப்படி current அல்லது nearby location ஐ ஷேர் செய்வது?
”சாட்” பகுதியை தேர்வு செய்யவும்
அதில் யாருக்கு லொகேஷனை அனுப்ப வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அந்த காண்டாக்ட்டை எடுத்துக் கொள்ளவும்
பேப்பர் க்ளிப் ஐகான் மெசேஜ் செய்யும் பகுதியில், கீழே இருக்கும் அதை தேர்வு செய்யவும்
அதில் லோகேஷன் ஐகான் இருக்கும் அதனை தேர்வு செய்யவும்
பிறகு Share live location என்பதை தேர்வு செய்து தொடரவும்
சேண்ட் பட்டனை க்ளிக் செய்து லொகேசனை அனுப்பவும்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil