Advertisment

வாட்ஸ்அப்-ல் ஸ்கிரீன் ஷேர் செய்வது எப்படி? ஈஸி சிம்பிள் ஸ்டெப்ஸ்

வாட்ஸ்அப் வீடியோ காலில் இருக்கும் போது உங்கள் போன் திரையை ஸ்கிரீன் ஷேர் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
WhatsApp icon
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், வாட்ஸ்அப் அண்மையில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை அறிமுகம் செய்தது. அதாவது இதற்கு வேறு ஆப்-ம் இனி தேவையில்லை.

Advertisment

வாட்ஸ்அப் வீடியோ காலில் இருக்கும் போது உங்கள் போன் திரையை ஸ்கிரீன் ஷேர் செய்யலாம். குறிப்பாக இது ஆபிஸ் பயன்பாடுகள், நண்பர்களுடன் பேசும் போது இந்த வசதி பயன்படும். 
ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் வாட்ஸ்அப்  ஸ்கிரீன் ஷேர் செய்வது எப்படி என்று பார்ப்போம். 

1. முதலில் வாட்ஸ்அப் ஓபன் செய்து தனிநபர்கள் அல்லது குரூப் வீடியோ கால் செய்யவும். 
2.  இப்போது டிஸ்பிளே கீழே உள்ள ஸ்கிரீன் ஷேரிங் ஐகான், போன் உடன் ஏரோ இருப்பது போல் இருக்கும் ஐகானை கிளிக் செய்யவும். 

3.  இப்போது உங்கள் ஸ்கிரீன் ஷேர் செய்வதை Confirm செய்யவும். 
4.  இதன் பின் உங்கள் போன் ஸ்கிரீன் மற்றவருக்கு காண்பிக்கும். 
5.   இப்போது நீங்கள் ஃபைல்கள், ஆவணங்கள் போன்றவற்றை மற்றவர்களுக்கு  காண்பித்து விளக்கலாம். 
6.  ஸ்கிரீன் ஷேரிங் செய்வதை நிறுத்த வாட்ஸ்அப் ஆப் வந்து ஸ்டாப் ஸ்கிரீன் ஷேரிங்  கொடுக்கவும். 
7. அவ்வளவு தான் இப்போது வீடியோ கால் ஆப்ஷனுக்கு மாறிவிடும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Whatsapp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment