மெட்டா நிறுவனம் தனது மைக்ரோ பிளாக்கிங் சமூக ஊடக தளமான த்ரெட்ஸ்-ஐ (Threads) நாளை ( ஜூலை 6) அதிகாரப் பூர்வமாக வெளியிட உள்ளது. இன்ஸ்டாகிராம் செயலி மூலம் தற்போது ஷைன் -அப் (sign up) செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஆப்பிள், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் செயலி அறிமுகப்படுத்தப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் மூலம் ஷைன் -அப் செய்யலாம். அதோடு மெட்டா, த்ரெட்ஸ் செயலிக்கான லோகோவையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது இன்டிபெண்டண்ட் செயலியாக இருந்தாலும், போட்டோ, வீடியோ பகிர்வு தளமான இன்ஸ்டாகிராமின் ஒருங்கிணைந்த பகுதியாக த்ரெட்ஸ் உள்ளது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் ஷைன் அப் செய்யலாம். இன்ஸ்டாகிராம் பயனர் பெயரில் த்ரெட்ஸ் ஷைன் அப் செய்யலாம். இதை எவ்வாறு செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
த்ரெட்ஸ் ஷைன் -அப் செய்வது எப்படி?
- முதலில் உங்கள் போனில் த்ரெட்ஸ் செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.
- ஓபன் செய்து “Log in with Instagram” என்பதை கொடுக்கவும்.
- உங்கள் போனில் ஏற்கனவே இன்ஸ்டாகிராம் செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால், த்ரெட்ஸ் அதன் மூலமாகவே தானாகவே லாக்-இன் ஆகும்.
- இன்ஸ்டாகிராம் செயலி இல்லையென்றால், உங்கள் இன்ஸ்டாகிராம் ஐடி மற்றும் விவரங்களை குறிப்பிட்டு sign-up process-க்குள் நுழையவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”