ஆன்லைனில் விளம்பரங்கள் மூலம் மோசடி என்பது நாட்டில் இன்டர்நெட் மற்றும் சமூக ஊடகம் பயன்படுத்தும் 400 மில்லியனுக்கும் அதிகமான மக்களை கவர்ந்திழுக்க எளிதான வழியாகும். இந்த போலி ஆன்லைன் விளம்பரங்களின் நோக்கம் எளிமையானது, பணத்தை திருடுவது அல்லது ஆன்லைன் நற்பெயரை சேதப்படுத்துவது ஆகும்.
ஆன்லைன் விளம்பர மோசடி கிட்டத்தட்ட அனைத்து சமூக ஊடக தளங்கள் மற்றும் hatsApp, SMS, மின்னஞ்சல்கள் மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் வழியாகவும் நடக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில், 20 வயது மதிக்கத்தக்க 3 இளைஞர்கள் சென்னையில் 19 வயது கல்லூரி மாணவரை
சமூக ஊடகங்களில் வரும் போலி விளம்பரம் மூலம் ஏமாற்றினர். இதில் முதலீடு செய்தால் 2 மடங்கு லாபம் கிடைக்கும் எனக் கூறி ஏமாற்றிதாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். 30,000 ரூபாயை இழந்த இளம்பெண், ஆன்லைன் டிரேடிங்கில் ஏற்பட்ட நஷ்டத்தால் தற்கொலை செய்து கொண்டார்.
வித விதமான போலி விளம்பரங்கள்
1. இதற்கு குறிப்பட்ட டார்கெட் ஆடியன்ஸ் இல்லாமல் இணையம் முழுவதும் விளம்பரம் செய்யப்படுகிறது.
2. மோசடி செய்பவர் ட்ரெண்டிங்-ல் உள்ள பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை குறைந்த விலையில் விளம்பரப்படுத்துவர்.
3. பொருட்கள் வாங்குவதற்கு முன்பாகவே முன்தொகை செலுத்த வலியுறுத்துவர். அதன் பின்னர் மீண்டும் டெலிவரி கட்டணம், ஜிஎஸ்டி கோருவர்.
4. மோசடி செய்பவர்களில் எக்ஸ்பர்ட் ஆனவர்கள் சிலர், மக்களை நம்ப வைக்க லிவரி டிராக்கிங் விவரங்களையும் அனுப்புகிறார்கள். உண்மையில் அந்த பொருட்கள் வீட்டு அனுப்படுகிறது என்ற தோற்றத்தில் செய்வார்கள்.
5. மோசடி செய்பவர்கள் பொதுவாக பணத்தை பெற்ற உடன் உங்கள் நம்பரை ப்ளாக் செய்து விடுவார்கள்.
6. போலியான தள்ளுபடிகள் மற்றும் 'லிமிடெட் டைம் ஆஃபர்' எனக் கூறி விளம்பர படுத்துவார்கள்.
அவர்கள் அவசர தொனியையும் காட்டுகிறார்கள் மற்றும் போலியான விமர்சன வீடியோக்களை வைத்திருக்கிறார்கள்.
போலி விளம்பரங்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?
1. டொமைன் பெயரைச் சரிபார்க்கவும்
டொமைன் பெயர்களைச் சரிபார்த்து, லிங்க் சரியானதா என்பதைப் பார்க்கவும். எடுத்துக்காட்டாக, 'amazon' எடுத்துக் கொள்வோம். அதில் 'o' என்பதற்குப் பதிலாக பூஜ்ஜியம் என்ற எண் கொடுக்கப்பட்டிருக்கலாம். 'amaz0n' என்று கொடுக்கப்பட்டிருக்கலாம்.
2. கமெண்ட்ஸ் செக் செய்யவும்
இது எந்த சமூக ஊடக தளமாக இருந்தாலும் செய்ய வேண்டும். கருத்துகள் பகுதியை பார்க்க வேண்டும். மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களை வலையில் விழவிடாமல் காப்பாற்ற தங்கள் கதைகளை கருத்துகள் பிரிவில் பகிர்ந்து கொள்கிறார்கள்.
3. தீர ஆய்வு செய்யுங்கள்
விளம்பரத்தை கண்மூடித்தனமாக நம்பாமல், நீங்கள் அதைப் பற்றி சில ஆன்லைன் ஆராய்ச்சி செய்து, வலைத்தளத்தைப் பற்றி யாராவது புகாரைப் பதிவு செய்திருக்கிறார்களா என்று பார்க்கலாம்.
ஆய்வு செய்ய சில ஆன்லைன் டூல்ஸ் பயன்படுத்தலாம்
ஆன்லைன் விளம்பரங்கள் மற்றும் அவற்றின் URLகளை ஆய்வு செய்ய உதவும் 3 ஆன்லைன் டூல்ஸ் உள்ளன.
1. who.is
https://who.is/
இந்த இணையதளம் உயர்தர டொமைன் தரவு மற்றும் ஒரே தேடலில் இருந்து டொமைன்கள் மற்றும் அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்கள் பற்றிய துல்லியமான விளக்கங்களை வழங்குகிறது. ஆன்லைன் கருவியானது பதிவாளர் தகவல் மற்றும் இணையதளத்தின் முக்கிய தேதிகளான அதன் காலாவதி தேதி, பதிவு தேதி மற்றும் புதுப்பிப்பு தேதி போன்ற விவரங்களை வழங்குகிறது. கருவி இதே போன்ற டொமைன் பெயர்களையும் வழங்குகிறது. டிஎன்எஸ் (டொமைன் நேம் சிஸ்டம்) பதிவுகளையும் இதன் மூலம் ஒருவர் சரிபார்க்கலாம்.
who.is மிகவும் பயனுள்ள கருவியாகும், இதன் மூலம் வைப் செட்டின் நம்பகத்தன்மையை கண்டறியலாம்.
2. ISIT PHISHING https://isitphishing.org/ மற்றும் 3. Google Social Search https://www.social-searcher.com/google-social-search/ என்ற ஆன்லைன் டூல்ஸ் பயன்படுத்தியும் ஆய்வு செய்து வைப்சைட்டின் உண்மைத் தன்மை அதன் பின்னணி விவரங்களைப் பெறலாம்
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/artificial-intelligence/facts-about-fiction-spot-fake-online-ads-9030625/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.