நவீன மயமான இந்த காலத்தில், ஃபோன் இன்றியமையாததாக ஆகிவிட்டது. அத்தியாவசிய பொருளாக ஃபோன் மாறிவிட்டது. ஃபோன் இருந்தால் அனைத்தும் வீட்டிலிருந்தபடியே செய்து முடித்தாகிவிடும். அந்த அளவிற்கு ஃபோன் பயன்பாடு மற்றும் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. ஒரு விதத்தில் நன்மை என்றாலும், நாணயத்தின் இருபக்கம் போல தீமையும் இருக்கத்தான் செய்கிறது. உங்கள் ஃபோனில் உங்களுக்கே தெரியாமல் பல செயலிகள் உங்களை நோட்டமிட்டு வருகிறது. அதாவது தேவையின்றி (லொகேஷனை) உங்கள் இருப்பிடத் தரவுகளை சேகரித்து வருகிறது. 1 வாரம், 1 மாதத்திற்கு முன் எங்கு சென்று வந்தீர்கள் என்பது கூட துல்லியமாக பதிவாகியிருக்கிறது. இது பிரைவசியை பாதிப்பதாக உள்ளது. சரி, இதை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்த வழிகாட்டியை பார்க்கலாம்.
Advertisment
எந்தெந்த செயலிக்கு லொகேஷன்ஆக்ஸிஸ் தேவை?
எந்தெந்த செயலிக்கு உண்மையில் லொகேஷன் ஆக்ஸிஸ் தேவை என்பதை கண்டறிய வேண்டும். உதராணமாக Google Maps லொகேஷன் பயன்பாடு அவசியம்.
சமூகவலைதள செயலிகளுக்கு லொகேஷன் ஆக்ஸிஸ் தேவை இல்லை. அவ்வாறு கொடுக்கப்பட்டிருந்தால் அதை நிறுத்திவிடலாம்.
Advertisment
Advertisement
ஆனால் ஓலா, உபர் போன்ற செயலிகளுக்கு லொகேஷன் ஆக்ஸிஸ் தேவை. கார், ஆட்டோ ஓட்டுநர்கள் நமது இருப்பிடத்தை அறிய எளிதாக இருக்கும். ஆனால் இதிலும் கவனம் தேவை. செயலி பயன்பாட்டில் இல்லாத போது அதை நிறுத்தி வைக்கலாம்.
நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ தளங்களும் லொகேஷன் பயன்படுத்துகின்றன. நமது இருப்பிடத்திற்கு தகுந்தாற்போல் விளம்பரம், படங்கள் போன்றவற்றை காட்சிபடுத்த பயன்படுத்துகின்றன.
ஆண்ட்ராய்டுஃபோனில் குறிப்பிட்ட செயலிகளின்லொகேஷன் பயன்பாட்டை தடுப்பது எப்படி?
1.settings மெனுவிற்கு செல்ல வேண்டும்.
“Apps and notifications” என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
“App Permissions”க்குள் செல்ல வேண்டும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள “Location” ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
இதில் நான்கு வகைகள் கொடுக்கப்பட்டிருக்கும். 1. எப்போதும் உங்கள் லொகேஷனை பயன்படுத்த அனுமதி. 2. தேவைப்படும் போது மட்டும் அனுமதி 3. லொகேஷனை பயன்படுத்தும்முன் அனுமதி கேட்டு பயன்படுத்துவது 4. லொகேஷனை பயன்பாடு வேண்டாம் என அதில் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதை நாம் பயன்படுத்தி லொகேஷன் பயன்பாட்டை முறைப்படுத்திக் கொள்ளலாம். இந்த settings ஒவ்வொரு ஆண்ட்ராய்டு தொலைபேசிக்கும் வேறுபடலாம். ஆனால் பெரியளவு மாற்றம் இருக்காது.
ஐபோனில் லொகேஷன் பயன்பாட்டை தடுப்பது எப்படி?
ஆண்ட்ராய்டு போலவே இதிலும் எளிதாக பயன்படுத்தலாம். settings மெனுவிற்கு செல்ல வேண்டும். அதில் Privacy > Location Services மெனுவிற்கு சென்று லொகேஷன் பயன்பாட்டை மாற்றிக் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“