மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் மிகவும் பிரபலமான சமூக வலைதளமாகும். பயனர்கள் இதில் தங்களைப் பற்றி போஸ்ட் செய்தும், ஸ்டோரி பகிர்ந்தும் மகிழ்வர். அந்த வகையில், நீங்கள் ஸ்டோரி பதிவிடும் போது உங்கள் நண்பரை டேக் செய்ய மறந்துவிட்டால் இனி அந்த பதிவை டெலிட் செய்ய தேவையில்லை. இன்ஸ்டாகிராம் அதற்கு add tags என்ற வசதியை கொண்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் போஸ்ட் பதிவிட்ட பின் ஒருவரை எப்படி டேக் செய்வது?
1. இன்ஸ்டாகிராம் ஓபன் செய்து இடப்புறத்தில் உள்ள உங்கள் ஸ்டோரி பக்கத்தை கிளிக் செய்யவும். இப்போது எந்த ஸ்டோரியில் உங்கள் நண்பரை டேக் செய்ய வேண்டுமே அதை கிளிக் செய்யவும்.
2. கீழே வலப்புறத்தில உள்ளள 3 புள்ளி மெனு பட்டனை கிளிக் செய்யவும். “More” கொடுக்கவும்.
3. இப்போது மெனு பக்கத்தில் “Add Mentions” என்பதை செலக்ட் செய்யவும்.
4. இங்கு உங்கள் நண்பருடைய username டைப் செய்யவும். இன்ஸ்டாகிராம் அந்த பெயரை காட்டும்.
5. அடுத்து “Add” என்பதை கொடுக்கவும். அவ்வளவு தான் இப்போது உங்கள் நண்பர் பெயர் ஸ்டோரியில் மென்ஷன் ஆகும்.
ஆனால், ஸ்டோரியின் உள்ள அவரின் username காண்பிக்காது. அவர் மென்ஷன் செய்யப்பட்டுள்ளார் என்ற நோட்டிவிக்கேஷன் அனுப்பபடும். அவர் எப்போதும் போல் லைக், ரியாக்ட் செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“