மூவ் டூ ஐ.ஓ.எஸ் என்ற ஒரு ஆப் பயன்படுத்தி ஆண்ட்ராய்டு மொபைல் இருந்து ஐபோனுக்கு ஃபைல்களை எளிதாக மாற்றலாம். போட்டோ, வாட்ஸ்அப் டேட்டா, கான்டாக்ட் நம்பர் உள்பட பல ஆவணங்களை மாற்ற முடியும். இதை செய்ய,
1. உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் வைஃபை உடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்து, ஆண்ட்ராய்டின் சமீபத்திய அப்டேட்டை செய்ய வேண்டும். இதேபோல், உங்கள் புதிய ஐபோனையும் அது ஐ.ஓ.எஸ்-ன் சமீபத்திய பதிப்பிற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்து கொள்ளவும்.
2. இந்த டேட்டா டிராஸ்பர் நடந்து முடியும் வரை இரண்டு மொபைலையும் சார்ஜிங்கிலேயே வைக்க வேண்டும்.
3. உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனில் உள்ள அனைத்து டேட்டாவையும் ஏற்றுவதற்கு, உங்கள் புதிய ஐபோனில் போதுமான அளவு ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
4. இதை செய்த பின் ஃபைல்கள் டிரான்ஸ்பர் செய்ய கூகுள் ப்ளே ஸ்டோருக்கு சென்று, “மூவ் டூ ஐஓஎஸ்” என்கிற ஆப்பை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும்.
5. உங்கள் புதிய ஐபோனை ஆன் செய்து, செட்டிங்ஸ் சென்ற ஆப்ஸ் அண்ட் டேட்டா ஆப்ஷனுக்கு சென்று மூவ் டேட்டா From ஆண்ட்ராய்டு என்று கொடுக்கவும்.
6. இதை செய்த பின் ஃபைல்கள் உங்கள் ஐபோனுக்கு டிரான்ஸ்பர் செய்யப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“