How to transfer your whatsapp data without using google drive on Android Tamil News : வாட்ஸ்அப் சமீபத்தில் மறைகுறியாக்கப்பட்ட காப்பு அம்சத்தைச் சேர்த்தது. இது உங்கள் கூகுள் டிரைவ் மற்றும் ஐக்ளவுட் காப்புப்பிரதிகளை எண்ட் டு எண்ட் மறைகுறியாக்க அனுமதிக்கிறது. இது சேவையை ஒட்டுமொத்தமாக மிகவும் பாதுகாப்பானதாக ஆக்குகிறது. இருப்பினும், நீங்கள் உங்கள் வாட்ஸ்அப் டேட்டாவை காப்புப் பிரதி எடுக்கலாம் மற்றும் முற்றிலும் ஆஃப்லைன் முறைகள் மூலம் மற்றொரு தொலைபேசியில் மாற்றலாம். அதற்காக உங்களுக்குத் தேவையானது RAR போன்ற ஒரு கோப்பு சுருக்க (file compression) பயன்பாடு மட்டுமே.
உங்கள் ஃபைல்களை ஆஃப்லைன் காப்புப்பிரதியை எடுத்து, எல்லா தரவையும் ஒரே ஃபோல்டரில் பெறுவதன் மூலம், அந்த ஃபோல்டரை மற்றொரு தொலைபேசியில் மாற்றுவதன் மூலம் இந்த முறை செயல்படுகிறது. உங்களைச் சுற்றி வைஃபை இல்லாவிட்டாலும் இது செயல்படுவதால், உங்கள் முழு வாட்ஸ்அப் டேட்டாவையும் பதிவேற்றுவதையும் பதிவிறக்குவதையும் எளிதாகச் செய்யலாம்.
ஸ்டெப் 1: வாட்ஸ்அப்பில் லோக்கல் பேக்கப்பை உருவாக்கவும்
வாட்ஸ்அப்பின் உள்ளே, முகப்புப்பக்கத்தில் உள்ள மூன்று-புள்ளி மெனுவிற்குச் சென்று அமைப்புகள்/ சாட் / சாட் காப்புப்பிரதிக்குச் சென்று 'பேக் அப்' என்பதை க்ளிக் செய்யவும். லோக்கல் பேக்கப்பை உருவாக்கிய பிறகு, கூகுள் டிரைவ் பேக்கப் ஏதேனும் இருந்தால் நீங்கள் புறக்கணிக்கலாம். உங்கள் தொலைபேசியின் உள் சேமிப்பகத்தில் இப்போது ஒரு லோக்கல் காப்புப்பிரதி உருவாக்கப்பட்டுள்ளது.
லோக்கல் பேக்கப் தயாரானதும், பழைய சாதனத்திலிருந்து வாட்ஸ்அப்பை நீக்கவும்.
ஸ்டெப் 2: RAR அல்லது வேறு எந்த கோப்பு சுருக்க (file compression) பயன்பாட்டையும் நிறுவவும்
கூகுள் ப்ளே ஸ்டோருக்கு சென்று RAR செயலியைப் பதிவிறக்கம் செய்து அதை அமைக்கவும். இப்போது முழு வாட்ஸ்அப் டேட்டாவையும் சுருக்கி, ஒரே ஃபைலாக அதனை மாற்றவும். உங்களுக்கு விருப்பமான வேறு எந்த ஆப்ஸையும் கூட நீங்கள் தேர்வு செய்யலாம்.
ஸ்டெப் 3: உங்கள் வாட்ஸ்அப் டேட்டாவை சுருக்கவும்
RAR பயன்பாட்டின் உள்ளே, உங்கள் தொலைபேசியின் உள் சேமிப்பக டைரக்டரியை நீங்கள் காண்பீர்கள். ஆண்ட்ராய்டு/ மீடியாவுக்குச் சென்று ‘com.whatsapp’ கோப்புறையைத் தேடுங்கள். Com.whatsapp கோப்புறைக்கு அடுத்துள்ள டிக் அடையாளத்தைத் தேர்ந்தெடுத்து, மேலே உள்ள காப்பகத்தைச் சேர் பட்டனை அழுத்தவும் (‘+’ வடிவத்தில் இருக்கும்). முழு கோப்புறையும் இப்போது .rar ஃபைலாக மாறத் தொடங்க வேண்டும்.
உங்கள் முழு வாட்ஸ்அப் டேட்டாவையும் சுருங்குவது நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயல் மற்றும் அதற்கு சிறிது நேரம் ஆகலாம் என்பதை நினைவில் கொள்க. அதற்கு பதிலாக .zip கோப்பாக மாற்றலாம். முழு ஃபோல்டரையும் .zip கோப்பு அல்லது .rar ஃபைலாக மாற்றுவதற்கான ஒரே நோக்கம், முழு பரிமாற்ற செயல்முறையையும் குறைவான நேரத்தில் செய்வதற்காகத்தான்.
ஸ்டெப் 4: உங்கள் புதிய தொலைபேசியில் டேட்டாவை நகர்த்தவும்
புதிய com.whatsapp.rar ஃபைல்ளை(அல்லது com.whatsapp.zip கோப்பை நீங்கள் ஜிப் செய்திருந்தால்) உங்கள் புதிய ஃபோனுக்கு நகர்த்தவும்.
புதிய ஃபோனின் உள் சேமிப்பகத்தில் அதே கோப்பைத் துண்டித்து, பிரித்தெடுக்கப்பட்ட கோப்புறையை ('com.whatsapp' என்று பெயரிடப்பட வேண்டும்) அதே கோப்பகத்தில் வைக்கவும். இது உள் சேமிப்பு/ ஆண்ட்ராய்டு/ மீடியா என்கிற இடத்தில் இருக்கும்.
ஸ்டெப் 5: உங்கள் புதிய தொலைபேசியில் வாட்ஸ்அப்பை நிறுவவும்
நீங்கள் இப்போது புதிய தொலைபேசியில் வாட்ஸ்அப்பை நிறுவலாம் மற்றும் ஆரம்ப செயல்முறையின் போது, கூகுள் டிரைவ் காப்புப்பிரதியை தவிர்க்கவும். அதனால் பயன்பாடு லோக்கல் பேக்கப்பை தேட முயற்சி செய்கிறது. இது ஸ்டெப் 4-ல் குறிப்பிட்ட டைரக்டரியில், மீட்டெடுத்த கோப்புகளை வாட்ஸ்அப் கண்டறியும்.
கண்டறியப்பட்ட காப்புப்பிரதியை மீட்டெடுத்து, மீதமுள்ள நிறுவல் செயல்முறையைத் தொடரவும். அது முடிந்தவுடன், உங்கள் வாட்ஸ்அப் கணக்கு இப்போது புதிய தொலைபேசியில் தயாராக இருக்கும். ஸ்டேப் 4-ல் நீங்கள் உருவாக்கி புதிய தொலைபேசியில் நகலெடுத்த .rar அல்லது .zip ஃபைலை இப்போது நீக்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil