உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ஆட்டோ-கரெக்ட்டை முடக்குவது எப்படி?
How to turn off autocorrect on your android phone or tablet Tamil News இந்த அம்சம் சிலருக்குப் பயனுள்ளதாக இருந்தாலும், சில சமயங்களில் தடையாகவும் இருக்கலாம்.
How to turn off autocorrect on your android phone or tablet Tamil News : ஆண்ட்ராய்டு சாதனங்களில் உள்ள ஸ்டாக் கீபோர்டு அனுபவம், தானாகத் திருத்தும் அம்சத்துடன் வருகிறது. இது இயக்கப்பட்டால், நீங்கள் தட்டச்சு செய்வதைத் தானாகச் சரிபார்த்து அதுவே சரிசெய்கிறது.
Advertisment
இந்த அம்சம் சிலருக்குப் பயனுள்ளதாக இருந்தாலும், சில சமயங்களில் இது ஒரு தடையாகவும் இருக்கலாம். தானாகத் திருத்தும் விருப்பம் இயக்கப்பட்டால், தட்டச்சு செய்வதை மிகவும் கடினமாக்கலாம். ஏனெனில், நீங்கள் குறிப்பிட விரும்பும் வார்த்தையை இது முற்றிலும் மாற்றிவிடும்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், இந்த அம்சத்தை முடக்குவது நல்லது. ஏனென்றால், இது நாம் தட்டச்சு செய்வதில் கூடுதல் கட்டுப்பாட்டை அளிக்கிறது.
நீங்கள் நேட்டிவ் ஆண்ட்ராய்டு ஜிபோர்டைப் பயன்படுத்தினால், தானாகத் திருத்தும் அம்சத்தை முடக்க விரும்பினால், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் அதைச் செய்யலாம்.
ஆண்டிராய்டில் தானியங்கு திருத்தத்தை எவ்வாறு முடக்குவது?
உங்கள் ஆண்டிராய்டு ஃபோன் அல்லது டேப்லெட்டில் உள்ள அமைப்புகள் பகுதிக்குச் செல்லவும்
"சிஸ்டம்" அல்லது "பொது மேலாண்மை" எனப்படும் மெனுவில் மறைந்திருக்கும் மொழிகள் மற்றும் உள்ளீட்டு விருப்பத்தை க்ளிக் செய்யவும்.
மெய்நிகர் விசைப்பலகை (virtual keyboard) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
அடுத்து நீங்கள் நிறுவிய விசைப்பலகைகளின் பட்டியலைக் காண முடியும். இயல்புநிலை ஆண்டிராய்டு விசைப்பலகையான Gboard-ஐ க்ளிக் செய்யவும்.
இந்த அம்சம் சிலருக்குப் பயனுள்ளதாக இருந்தாலும், சில சமயங்களில் தடையாகவும் இருக்கலாம்.
சொந்த ஆண்டிராய்டு விசைப்பலகைக்கான அமைப்புகள் மெனு திறக்கப்பட வேண்டும். உரை திருத்தம் விருப்பத்தை க்ளிக் செய்யவும்.
தானியங்கு திருத்தத்திற்கு அடுத்துள்ள நிலை மாற்றத்தை ஸ்லைடு செய்யவும்.
நீங்கள் ஆண்ட்ராய்டில் வேறு சில விசைப்பலகை பயன்பாட்டைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், தானியங்கு திருத்த அம்சத்தை இயக்குவதற்கும் முடக்குவதற்கும் இந்த குறிப்புக்கள் சிறிது மாறுபடலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil