how to turn off location tracking on Android smartphones : உங்களின் ஸ்மார்ட்போன்கள் உங்களின் ஒவ்வொரு செய்கையையும் கண்காணித்து , உங்களை பின் தொடர்ந்து கொண்டே வருகிறது என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. உங்களின் தனிச் சுதந்திரத்தை சிதைக்கும் வகையில் சில பயன்பாடுகள் இருப்பதையும் நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
how to turn off location tracking on Android smartphones and iPhones ?
இதனை சரி செய்ய உங்கள் ஸ்மார்ட்போனின் லொகேஷன் சர்வீஸ்களை டர்ன் ஆஃப் செய்தால் மட்டும் போதுமானது. உங்களின் லொகேஷன் சர்வீஸ்களை ப்ளாக் செய்யாவிட்டால் உங்களின் ஒவ்வொரு செயல்முறைகளையும், உங்களின் இருப்பிடம், வேலைக்கு செல்லும் இடம், தற்போது நீங்கள் இருக்கும் இடம் என அனைத்து தகவல்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளலாம்.
லொகேஷன் சர்வீஸ்கள் மூலம் அடையும் நன்மைகள் அதிகம் என்றாலும் அதை எப்போது எங்கே தேவைக்கு ஏற்றபடி பயன்படுத்த வேண்டும் என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.
ஆண்ட்ராய்ட் போன்களில் லொகேஷனை எப்படி ஆஃப் செய்வது ?
செட்டிங்க்ஸ் செல்லவும்
அதில் கூகுள் அக்கௌண்ட்டை க்ளிக் செய்யவும்
டேட்டா அண்ட் பெர்சனலைசேசன் என்ற ஆப்சனை தேர்வு செய்யவும்.
அதில் லொகேசன் ஹிஸ்ட்ரியை டர்ன் ஆஃப் செய்யவும்
/tamil-ie/media/media_files/uploads/2019/03/smartphone-location-main.jpg)
ஐபோன்களில் லொகேஷன் ஹிஸ்ட்ரியை டர்ன் ஆஃப் செய்வது எப்படி ?
செட்டிங்ஸ் செல்லவும்
அதில் ப்ரைவசி என்ற ஆப்சனை தேர்வு செய்யவும்
பின்பு லொகேசன் சர்வீஸ் கொடுக்கப்பட்டிருக்கும்
லொகேசன் சர்வீஸில் இருக்கும் லொகேசன் ஹிஸ்ட்ரி என்ற ஆப்சனை தேர்வு செய்து ஸ்லைட் ஆஃப் செய்யவும்
/tamil-ie/media/media_files/uploads/2019/03/smartphone-location-services.jpg)
மேலும் கூகுள் வெப் மற்றும் ஆப் ஆக்டிவிட்டி சேவையை ஆன் செய்து வைத்தால், கூகுள் சர்வீஸ் உங்களின் இருப்பிடம், உங்களின் சர்ச் சேவைகள் என அனைத்து டேட்டாவையும் உங்கள் கூகுள் அக்கௌண்ட்டில் சேமித்து வைத்துக் கொள்ளும். இதை டர்ன் ஆஃப் செய்தால் அந்த பிரச்சனையும் உங்களுக்கு இல்லை.
கூகுளில் ஆக்டிவிட்டி கண்ட்ரோல்ஸ் பேஜ் செல்லவும். அதில் உங்களை லாக் இன் செய்ய கேட்கும். லாக் இன் செய்தவுடன் டர்ன் வெப் மற்றும் ஆப் ஆக்டிவிட்டி ஆன் அல்லது ஆஃப் செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க : 48எம்.பி. கேமரா போன் லிஸ்டில் இணைந்த ஓப்போவின் புதிய போன்