இன்ஸ்டாகிராமில் உங்கள் நண்பர், தோழியை ஏதோ ஒரு கோபத்தில், சண்டையில் பிளாக் செய்துவிட்டீர்கள் என்றால் அதை எப்படி அன்பிளாக் செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
இன்ஸ்டாகிராம் பிரபலமான சமூக வலைதளமாகும். இளைஞர்களுக்கு பிடித்தமான தளமாக இன்ஸ்டாகிராம் உள்ளது. உலகத்தில் உள்ள எந்த நபரிடத்திலும் பேசலாம். நண்பர்களுடன் பேசி மகிழலாம். அந்த வகையில் உங்கள் நண்பர், தோழியை ஏதோ ஒரு கோபத்தில், சண்டையில் பிளாக் செய்துவிட்டீர்கள் என்றால் அதை எப்படி அன்பிளாக் செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Advertisment
முதலில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஓபன் செய்து உங்கள் profile picture ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
profile picture பக்கத்தில், வலப்புறத்தில் உள்ள 3-பார் பட்டனை கிளிக் செய்து ‘Settings and Privacy’ செலக்ட் செய்யவும்.
இப்போது ‘Who can see your content’ செக்ஷன் சென்று ‘Blocked’என்பதை கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் பிளாக் செய்த அக்கவுண்ட் பட்டியல் காண்பிக்கப்படும்.
அடுத்து நீங்கள் யாரை அன்பிளாக் செய்ய விரும்புகிறீர்களோ அந்த நபரின் அக்கவுண்ட்டை கிளிக் செய்து அன்பிளாக் எனக் கொடுக்கவும்.
இன்ஸ்டாகிராம் மற்ற ஆப் போல் அல்லாமல் நீங்கள் யாரை பிளாக் அல்லது அன்பிளாக் செய்துள்ளீர்கள் என்பதை காண்பிக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“