scorecardresearch

ஜுன் 14 வரை இலவசம்: ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் என்றால் என்ன? எப்படி செய்வது?

Aadhaar update: ஜுன் 14 வரை ஆன்லைனில் ஆதார் அப்டேட்களை இலவசமாக மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

How to link Pan-Aadhaar with penalty
Aadhaar update

ஆதார் மிக முக்கிய அடையாள அட்டையாகும். இந்தியாவைச் சேர்ந்த குடிமக்களுக்கு ஆதார் வழங்கப்படுகிறது. ஷாப்பிங் முதல் வங்கிப் பரிவர்த்தனை வரை அனைத்திற்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆதார் மத்திய அரசால் வழங்கப்படும் தனித்துவ எண் கொண்ட அடையாள அட்டையாகும். பெயர், பிறந்த தேதி, புகைப்படம், தனித்துவ அடையாள எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். முன்னதாக, ஆதார் பெற, புகைப்படம் எடுக்கப்படும், கண்கள் ஸ்கேன் செய்யப்படும். உங்கள் கைரேகை ஆகியவை வழங்கப்பட வேண்டும். இதுவே பயோமெட்ரிக் டேட்டா எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் உங்கள் பெயரில், உங்கள் அடையாளத்தில் போலி ஆதார் அட்டை பெறுவது தடுக்கப்படும்.

அந்த வகையில் மத்திய அரசின் UIDAI ஜுன் 14 வரை ஆன்லைனில் ஆதார் அப்டேட்களை இலவசமாக மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. அதுவும் ஆன்லைனில் மட்டுமே இலவசமாக செய்யப்படும். இ-சேவை மையங்கள், தபால் நிலையங்களில் செய்ய ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

உங்கள் ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பு செய்து கொள்ள வேண்டும்.

ஆதார் பயோமெட்ரிக் எவ்வாறு அப்டேட் செய்வது?

  1. உங்கள் அருகில் உள்ள ஆதார் மையம், தபால் நிலையம், இ-சேவை மையங்களுக்கு செல்லவும்.
  2. ஆதார் Enrolment/ அப்டேட் விண்ணப்பத்தை பெற்று நிரப்ப வேண்டும்.
  3. அதை ஆதார் மைய நிர்வாகியிடம் கொடுத்து உங்கள் ஆதார் விவரங்களை கூற வேண்டும்.
  4. இப்போது உங்கள் பயோமெட்ரிக் டேட்டா கைரேகை (fingerprints) அல்லது கண் (iris) ஸ்கேன் செய்யப்படும்.
  5. ஆதார் மைய நிர்வாகி உங்கள் ஆதார் விவரங்களை சரிபார்த்து UIDAI தளத்தில் அப்டேட் செய்வார். அவ்வளவு தான்.
  6. சேவை கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும்.

பெரும்பாலான ஆதார் அப்டேட் சேவைகள் ஆதார் மையம், தபால் நிலையங்களில் மட்டுமே செய்யப்படுகிறது. சிறிய அளவிலான சேவைகளுக்கு மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: How to update aadhaar biometrics