ஆதார் அட்டை மிக முக்கிய அடையாள அட்டையாகும். பல்வேறு துறைகளிலும் ஆதார் அட்டை முக்கிய அடையாள அட்டையாக பயன்படுத்தப்படுகிறது. வங்கி பணப் பரிவர்த்தனை, வருமான வரி என அனைத்திலும் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உங்கள் ஆதார் அட்டையை அப்டேட் செய்து வைப்பது அவசியமாகிறது. ஆதார் அட்டை வாங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றால் ஆன்லைன், ஆப்லைன் மூலம் உங்களுடையே தற்போதுள்ள சான்றிதழ் படி புதுப்பிக்க வேண்டும். ஆன்லைனில் ஆதார் புதுப்பிக்க ரூ.25 கட்டணமாகவும், ஆப்லைனில் ரூ.50 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. அடையாள அட்டை, முகவரி சான்றிதழ்கள் கொண்டு புதுப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் ஆதார் அப்டேட் செய்வது எப்படி?
1. uidai.gov.in என்ற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
2. ஹோம் பேஜில் 'My Aadhaar' டேப் கிளிக் செய்து 'Update Demographics Data and Check status' என்பதை செலக்ட் செய்யவும்.
3. இப்போது லாக்கின் பக்கத்தில் உங்கள் ஆதார் நம்பர், கேப்ட்சா கொடுக்கவும். இப்போது ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓ.டி.பி வரும். அதை உள்ளிடவும்.
4. 'Update Aadhaar Online' செக்ஷன் சென்று 'Update Aadhaar' எனக் கொடுக்கவும்.
5. எந்த விவரத்தை அப்டேட் செய்ய வேண்டுமே அதைத் குறிப்பிட்டு அதற்கான சான்றிதழை சப்மிட் செய்யவும். அவ்வளவு தான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“