ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPF) உறுப்பினர்கள் இப்போது ஆன்லைன் தளத்தைப் பயன்படுத்தி ஒரு நிறுவனத்தில் இருந்து வெளியேறிய தேதி (date of exit) அப்டேட் செய்ய முடியும்.
இதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அதாவது ஊழியர் ஒரு நிறுவனத்தில் இருந்து வெளியேறிய 2 மாதங்களுக்குப் பிறகுதான் தேதியை அப்டேட் செய்ய முடியும். மேலும் பழைய நிறுவனத்தில் இருந்து வெளியேறிய தேதியை தோராயமாக குறிப்பிட்டால் போதும். ஆனால் வெளியேறிய மாதத்தை சரியாக குறிப்பிட்டு தேதியை தோராயமாக குறிப்பிடலாம்.
'டேட் ஆப் எக்ஸிட்' அப்டேட் செய்வது எப்படி?
UAN போர்ட்டல் வழியாக ஊழியர்கள் 'டேட் ஆப் எக்ஸிட்' அப்டேட் செய்ய முடியும்.
1. UAN போர்ட்டல் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திற்கு சென்று UAN மற்றும் பாஸ்வேர்ட் பயன்படுத்தி லாக்கின் செய்யவும்.
2. அடுத்து 'Manage' டேப் சென்று 'Mark exit' என்பதை செலக்ட் செய்யவும். எந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறினீர்களே அந்த நிறுவனத்தின் PF அக்கவுண்ட் நம்பர் செலக்ட் செய்யவும்.
3. வெளியேறிய தேதி மற்றும் அதற்கான காரணத்தை பதிவிடவும்.
4. Request OTP கொடுத்து பின்னர் உங்கள் எண்ணிற்கு வந்த ஓ.டி.பி-ஐ பதிவிடவும்.
5. அடுத்து வரும் செக் பாக்ஸ் ( checkbox) செலக்ட் செய்து, 'Update,' என்பதை கிளிக் செய்து அடுத்து 'ஓகே' கொடுக்கவும். அவ்வளவு தான் இப்போது உங்களுக்கு இது தொடர்பான எஸ்.எம்.எஸ் வரும். குறிப்பு: ஒருமுறை 'டேட் ஆப் எக்ஸிட்' கொடுத்துவிட்டால் மீண்டும் அதை மாற்ற முடியாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“