UIDAI Aadhar Card Address, Mobile Number, Name Update Online: ஆதார் அட்டை என்பது 12 வித்தியாசமான எண்கள் கொண்ட குடிமக்களின் அடையாள அட்டை. இந்த திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டமாகும்.
இதில், இந்தியா நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமக்களின் விவரங்களும் அடங்கியிருக்கும். வங்கி கணக்கு தொடங்குவதற்கு, புதிய செல்போன் சிம் கார்ட் வாங்குவதற்கு அல்லது விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு இந்த ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Aadhaar card Update: ஆதார் அட்டையில் விவரங்களை மாற்றுவது எப்படி:
இந்த அட்டையில், பெயர், வீட்டு விலாசம் மற்றும் தொலைப்பேசி எண் உட்பட பல விவரங்கள் அடைங்கியிருக்கும். இந்த விவரங்களை மாற்றுவதில் பலரும் பல சிக்கல்கள் வரும். மேலும் பலர் எங்கு மாற்றங்களை செய்வது என்றுக் கூட தெரியாமல் அலைவார்கள். அந்த வகையில், மிகவும் எளியமுறையில் ஆதார் விவரங்களை மாற்றம்/ அப்டேட் செய்யலாம்.
ஆதார் அட்டையில் வீட்டு விலாசம் மாற்றுவது எப்படி?
நீங்கள் வேறு ஊருக்கு அல்லது புதிய வீட்டிற்கு மாறியிருந்தால், ஆன்லைன் மூலமாகவே வீட்டு விலாசம் மாற்றிக் கொள்ளலாம். உங்கள் ஆதார் அட்டையுடன் செல்போன் எண்ணை இணைத்திருந்தால், ஆன்லைனில் உங்கள் விலாசத்தை மாற்றுவது மிகவும் சுலபம்.
நீங்கள் எந்த செல்போன் எண்ணை பதிவு செய்திருக்கீற்களோ அந்த செல்போனை உங்கள் அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், ஆதார் இணையத்தளத்திற்குள் நிழையும்போது, ஓடிபி எண் உங்கள் செல்போனுக்கு வரும். அந்த ஓடிபி எண்ணை வைத்து ஆதார் இணையத்தளத்திற்குள் நுழையலாம். இவ்வாறு வீட்டு விலாசம் மாற்று இரண்டு வழிகள் உள்ளது.
ஆப்ஷன் 1: சரியான இருப்பிட சான்று
/tamil-ie/media/media_files/uploads/2019/02/portal.jpg)
- ஆதார் விவரங்கள் வைத்து இணையத்தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.
- சமீபத்திய அல்லது சரியான வீட்டு விலாசத்தை பதிவு செய்யவும்.
- ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
- பின்னர் சப்மிட் கொடுத்து மற்றும் யூஆர்என் சேவ் செய்யவும்.
ஒருவேளை உங்களிடம் இருப்பிட சான்று இல்லையென்றால், உங்களின் விலாசத்தை UIDAI சரிபார்ப்பு கடிதம் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
இருப்பிட சரிபார்ப்பு கடிதத்தை பெறுவதற்கு வீட்டு ஓனரிடம் இருந்து ஒரு கடிதத்தை பெற வேண்டும். அல்லது குடும்பத்தினர்/ உறவினர்கள்/ நண்பர்கள் உள்ளிட்டவர்களிடமும் கடிதம் பெறலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2019/02/valid759.jpg)
ஆப்ஷன் 2 : கடிதத்துடன் பதிவு செய்வது:
- ஆதார் விவரங்கள் வைத்து இணையத்தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.
- கடிதத்தில் உள்ள ஒரு ரகசிய எண்ணை பதிவிடுங்கள்.
- பின்னர் விலாசம் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்
- பின்னர் சப்மிட் கொடுத்து மற்றும் யூஆர்என் சேவ் செய்யவும்.
ஆதார் அட்டையில் விலாசம் மாற்ற என்னென்ன ஆவணங்கள் தேவை?
வீட்டு விசாலம் மாற்ற சில முக்கிய ஆவணங்களை புகைப்படங்களாக ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பாஸ்போர்ட், வோட்டர் ஐடி, ரேஷன் அட்டை, தொலைபேசி கட்டணம் பில் போன்றவற்றில் ஒன்றை அழைக்க வேண்டும். இவற்றில், நீங்கள் எடுத்து வைக்கும் ஆவணம் 3 மாதங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கக் கூடாது.
ஆதார் அட்டையில் செல்போன் எண் மாற்றுவது எப்படி?
ஆதார் வைத்திருப்பவர்களால் மட்டுமே விவரங்களை மாற்றவோ அப்டேட் செய்யவோ முடியும். மாற்றங்களை செய்ய வேண்டும் என்பவர்கள், அருகில் உள்ள பதிவு அல்லது மேம்பாட்டு மையத்தை அணுகவும். அங்கு பெயர், பிறந்தநாள் தேதி, பால், உறவு, செல்போன் எண் மற்றும் இ-மெயில் விவரங்களை மாற்றிக் கொள்ளலாம்.
ஆதார் அட்டையில் விவரங்கள் மாற்ற எவ்வளவு கட்டணம்?
பொதுவாகவே ஆதார் அட்டையில் விவரங்களை மாற்ற கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் ஒருவேளை அருகே உள்ள மையங்களில் மாற்றம் செய்தால், சுமார் 25 ரூபாய் வசூலிக்கப்படும்.
ஆதார் அட்டையில் பெயரை மாற்ற என்னென்ன ஆவணங்கள் தேவை?
உங்களின் பெயரை மாற்ற ஒரு சில ஒரிஜினல் ஆவணங்கள் மிகவும் அவசியம். அருகே உள்ள மையத்திற்கு சென்று இதனை மாற்ற முடியும். ஒரிஜினல் ஆவணங்களை ஸ்கேன் செய்த பிறகு உங்களிடமே திருப்பி கொடுத்துவிடுவார்கள். இதற்கு, பாஸ்போர்டு, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவை தேவை.