/tamil-ie/media/media_files/uploads/2019/03/vicky-17.jpg)
வங்கியில் தங்களது வாடிக்கையாளர்களின் தரவைகளை சரிபார்க்க கே.ஒய்.சி செய்ய அறிவுறுத்துகிறது. பொதுவாக இது வங்கி கணக்கு தொடங்கும் போது செய்யப்படும். அதன்பின் சில கால இடைவெளியில் தகவல்களை அப்டேட் செய்ய வேண்டும். இதன் மூலம் உங்கள் தகவல்கள் வங்கி உடன் தகவல்களுடன் அப்டேட்டடாக இருக்கும். பெயர் முதல் வீட்டு முகவரி வரை அனைத்தும் அப்டேட் செய்யப்படும். ஒரு முறை வங்கியில் நேரடியாக சென்று தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து கே.ஒய்.சி பூர்த்தி செய்து விட்டால் அதன் பின் அப்டேட் செய்ய வங்கிக்கு செல்லத் தேவையில்லை. ஆன்லைனில் வீட்டில் இருந்தபடியே கே.ஒய்.சி அப்டேட் செய்யலாம்.
எஸ்.பி.ஐ வங்கியில் கே.ஒய்.சி (KYC) அப்டேட் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். எஸ்.பி.ஐ வங்கியின் அதிகாரப்பூர்வ செயலி மற்றும் இன்டர்நெட் பேங்கிங் மூலம் இதை செய்யலாம் எனத் எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி எஸ்.பி.ஐ வங்கியின் அதிகாரப்பூர்வ செயலி YONO ஆப் மூலம் செய்யலாம்.
YONO மூலம் கே.ஒய்.சி அப்டேட் செய்வது எப்படி?
1. YONO ஆப்-ல் லாக்கின் செய்யவும். யூசர்ஐ.டி, பாஸ்வோர்ட் கொடுத்து லாக்கின் செய்யவும்.
2. ஹோம் பேஜில் இடதுபுறத்தில் உள்ள மெனுவில் உள்ள SERVICE REQUEST ஆப்ஷனை கொடுக்கவும். (இந்த மெனு KYC புதுப்பிப்பு நிலுவையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே காண்பிக்கப்படும்)
3. அடுத்து அப்டேட் கே.ஒய்.சி ஐகானை கிளிக் செய்யவும்.
4. profile password என்டர் செய்து submit கொடுக்கவும்.
5. இப்போது முகவரி விவரங்கள் வரும். அதை சரிபார்க்கவும்.
6. Occupation, income parameters, kyc address details இவைகள் தேவைப்பட்டால் அப்டேட் செய்யவும்.
7. KYC முகவரி விவரங்களை மேம்படுத்துவதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும் (ஆம் அல்லது இல்லை) என்று குறிப்பிடவும்.
8. அண்டர்டேக்கிங் பாக்ஸில் டிக் செய்து நெக்ஸ்ட் பட்டனை கிளிக் செய்யவும்.
9. இப்போது பதிவு செய்யப்பட்ட நம்பருக்கு அனுப்பபட்ட ஓ.டி.பி-ஐ உள்ளிட்டு submit கொடுக்கவும்.
CIFக்கான வெற்றிகரமான KYC அப்டேட் செய்யப்பட்டது என மெசேஜ் அனுப்பபடும். YONO மூலம் வங்கிப் பதிவுகளில் புதுப்பிக்கப்பட்டது என்பதையும் காண்பிக்கும்.
இன்டர்நெட் பேங்கிங் மூலம் கே.ஒய்.சி அப்டேட்
1. எஸ்.பி.ஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இன்டர்நெட் பேங்கிங் பக்கம் சென்று லாக்கின் செய்யவும்.
2. My Accounts and Profile பக்கம் செல்லவும்.
3. அப்டேட் கே.ஒய்.சி ஐகானை கிளிக் செய்து, dropdown லிஸ்டில் இருந்து அக்கவுண்டை செலக்ட் செய்யவும்.
4. இப்போது முகவரி விவரங்கள் வரும். அதை சரிபார்க்கவும்.
5. income parameters, kyc address details உள்ளிட்டவைகளை பூர்த்தி செய்யவும்.
6. கடைசியாக Declaration படிவத்தை டிக் செய்து நிரப்பவும். ஓ.டி.பி அனுப்பபட்டு விவரங்கள் சரிபார்க்கப்படும்.
இதை செய்த பின் கே.ஒய்.சி அப்டேட் செய்யப்பட்டது தொடர்பாக மெசேஜ் அனுப்பபடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.