உங்கள் வங்கி கணக்கின் கே.ஒய்.சி-ஐ அப்டேட் செய்வது மிகவும் அவசியம். பிப்ரவரி 25, 2016 அன்று இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி, வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் KYC-ஐ அப்டேட் செய்வது அவசியமாகும். அதன்படி, எஸ்.பி.ஐ வங்கி கணக்குப் பயனர்கள் ஆன்லைனில் 10 நிமிடத்தில் கே.ஒய்.சி அப்டேட் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
இன்டர்நெட் பேங்கிங் மூலம் கே.ஒய்.சி அப்டேட்
1. எஸ்.பி.ஐ வங்கி இன்டர்நெட் பேங்கிங் பக்கத்திற்கு செல்லவும். லாக்கின் செய்யவும்.
2. அதில், ‘My Accounts & Profile’ டேப் கிளிக் செய்யவும்.
3. அடுத்து அதில் ‘Update KYC’ ஆப்ஷன் கொடுக்கவும். இப்போது உங்கள் profile password கொடுத்து Submit கொடுக்கவும்.
4. drop-down மெனுவில் இருந்து உங்கள் அக்கவுண்ட் செலக்ட் செய்து Submit கொடுக்கவும்.
5. அப்டேட் செய்யப்பட வேண்டிய தகவல்களை கொடுக்கவும். அதற்கு தகுந்த ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.
6. இப்போது பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு ஓ.டி.பி அனுப்பபடும். அந்த ஓ.டி.பி எண்ணை உள்ளிட்டு அப்டேட் கொடுக்கவும். இதன்பின், உங்கள் தகவல்கள் வங்கி கணக்குடன் அப்டேட் செய்யப்படும்.
இதேபோல் எஸ்.பி.ஐ வங்கியின் YONO செயலி மூலமும் கே.ஒய்.சி அப்டேட் செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“