பயனர்கள் இனி கே.ஒய்.சி அப்டேட்டை வீட்டில் இருந்தபடியே வங்கிக்குச் செல்லாமல் ஆன்லைனில் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நிதி அமைப்பைப் பாதுகாக்க பயனர்கள் தங்கள் கே.ஒய்.சி தொடர்ந்து புதுப்பிப்பதை கட்டாயமாக்கியுள்ளது.
வங்கி உடன் ஏற்கனவே சரியான ஆவணங்கள் சமர்ப்பித்த மற்றும் வீட்டு முகவரியை மாற்றாத பயனர்கள் தங்கள் கே.ஒய்.சி-ஐ ஆன்லைனில் அப்டேட் செய்யலாம் எனக் கூறியுள்ளது.
ஆன்லைனில் கே.ஒய்.சி அப்டேட் செய்வது எப்படி?
- உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கம் செல்லவும்.
2. கே.ஒய்.சி டேப் சென்று கிளிக் செய்யவும்.
3. இப்போது உங்கள் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதியை கொடுத்து அதில் கேட்கும் விவரங்களை குறிப்பிடவும்.
4. இப்போது ஸ்கேன் செய்யப்பட்ட ஆதார், பான் ஆவணங்களை பதிவிடவும்.
5. ஆவணங்களின் முன் பக்கம், பின் பக்கம் இரண்டையும் கொடுக்க வேண்டும்.
6. இப்போது சப்மிட் பட்டன் கொடுக்க வேண்டும்.
7. அடுத்தாக service request number அனுப்பபடும். அதை வைத்து உங்கள் கே.ஒய்.சி அப்டேட் நிலையை அறிந்து கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“