டிஜிலாக்கர், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தினால் வாகன ஓட்டிகளுக்கு பயன்படும்வகையில் கிளவுட் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள செயலி ஆகும். இதில் டிரைவிங் லைசென்ஸ், ஆதார் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில் வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் போது அதை காண்பிக்கலாம்.
டிஜிலாக்கரில் டிரைவிங் லைசென்ஸ் அப்லோடு செய்வது எப்படி?
1. முதலில் டிஜிலாக்கர் டவுன்லோடு செய்யவும். மொபைல் எண்ணிற்கு வரும் ஒன்டைம் பாஸ்வேர்டின் உதவியுடன் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டை கொண்டு, புதிய டிஜிலாக்கர் அக்கவுண்டை உருவாக்கிக் கொள்ளலாம்.
2. டிஜிலாக்கர் அக்கவுண்டை உருவாக்கிய பின்னர், அதனுடன் ஆதார் எண்ணை இணைத்து, டிஜிலாக்கரின் மற்ற சேவைகளையும் நம்மால் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
3. பின் Pull Partner Documents என்ற பகுதிக்கு சென்று பதிவேற்றம் செய்ய இருக்கும் ஆவணங்கள் மற்றும் அதன் வகைகள் குறித்த விபரங்களை உள்ளிட வேண்டும்.
4, டிரைவிங் லைசென்ஸ் நம்பரை நாம் உள்ளீடு செய்கையில், டிஜிலாக்கர் அதனை சாலை போக்குவரத்து துறை ஆவணங்களுடன் அதை ஒப்பிட்டு பார்க்கும்.
5. விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்கள் ஓட்டுநர் உரிமம் அப்லோடு செய்யப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“