மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலி ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். போட்டோ, வீடியோ, ரீல்ஸ் அப்லோடு செய்து நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து மகிழலாம். அந்தவகையில் Default-ஆக இன்ஸ்டாகிராமில் பயனர்களின் டேட்டாவை சேமிக்க உதவும் வகையில் குறைந்த அளவு ரெசஸ்யூசனாக போட்டோ, வீடியோ அப்லோடு செய்யும் படி ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும்.
இந்நிலையில் இந்த ஆப்ஷனை மாற்றுவதன் மூலம் நீங்கள் உயர் தரத்தில் ஹெச்.டி ரெசஸ்யூசனில் போட்டோ, வீடியோ அப்லோடு செய்யலாம். அது குறித்து பார்ப்போம்.
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு
முதலில் இன்ஸ்டாகிராம் செயலி ஓபன் செய்து உங்கள் ப்ரொபைல் ஐகான் பக்கம் சென்று வலப்புறத்தில் உள்ள ஹேம்பர்கர் மெனுவை கிளிக் செய்யவும். செட்டிங்க்ஸ் மற்றும் ப்ரைவசி மெனுவை செலக்ட் செய்து, டேட்டா பயன்பாடு மற்றும் மீடியா குவாலிட்டி கிளிக் செய்து Highest quality என்ற ஆப்ஷனை எனேபிள் செய்யவும். அவ்வளவு தான், இப்போது போனில் எடுக்கப்பட்ட அதே தரப்பில் உயர் தரத்தில் போட்டோ, வீடியோ அப்லோடு செய்யலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“