காரடியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 71 சிம்கார்டுகள் வழங்கப்பட்டத்தில் ஆதார் மோசடி நடந்துள்ளதாக தொலைத்தொடர்பு நிறுவன அதிகாரி ஒருவர் அளித்த புகாரின் பேரில் சந்தன்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொலைத்தொடர்புத் துறையால் உருவாக்கப்பட்ட software மூலம் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. அதில்,
ஒரே மாதிரியான ஆதார் எண், புகைப்படங்கள் உள்ள ஆதார் கார்டை பயன்படுத்தி சிம்கார்டுகள் பெறபட்டது தெரியவந்தது. ஆதார் அட்டைகளை தவறாகப் பயன்படுத்தியது தெரியவந்தது. இந்நிலையில், காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
உங்க ஆதார் கார்டு பாதுகாப்பாக உள்ளதா?
ஆதார் கார்டு மிக முக்கிய அடையாள அட்டையாகும். வங்கி பயன்பாடு முதல் ஷாப்பிங் வரை அனைத்திற்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் ஆதார் வைத்து பல்வேறு வகையில் மோசடிகளும் அரங்கேறுகிறது. இந்நிலையில் ஆதார் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து மத்திய அரசின் UIDAI
ஆலோசனைகளை வழங்குகிறது. அதுகுறித்துப் பார்ப்போம்.
1. ஒருவர் தங்களது ஆதார் எண் பகிர்ந்து கொள்ள முடியாவிட்டால், Aadhaar Virtual ID பயன்படுத்தலாம். இதுவும் UIDAI-ஆல் வழங்கப்படும் சேவையாகும். அதாவது ஆதாருக்கு மாற்றாக பயன்படுத்தலாம். 16 இலக்க எண் கொண்ட Temporary number ஆகும்.
2. அடுத்ததாக, உங்கள் ஆதாரை சில மாதத்திற்கு பயன்படுத்த மாட்டீர்கள் என்றால் அதை லாக் செய்து வைக்கலாம். மீண்டும் எப்போது வேண்டுமானாலும் அன்லாக் செய்யலாம். ஆதார் அதிகாரப்பூர்வ UIDAI இணைய தளத்தில் இச் சேவையைப் பயன்படுத்தலாம். அதோடு நீங்கள் தேவையில்லாத இடங்கள், 3-ம் தரப்பு செயலிகளில் ஆதார் போன்ற அடையாள எண்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“