அமேசான் பே லேட்டர் வசதி மிகவும் பயனுள்ள மற்றும் அமேசானின் பிரபலமான சேவையாகும். அமேசான் பே லேட்டர் மூலம் பயனர்கள் அமேசான் தளத்தில் விரும்பிய பொருட்களை வாங்கி அதற்கான கட்டணத்தை பின்னர் செலுத்துவதாகவும். அதாவது வாங்கிய பொருளுக்கான பணத்தை அடுத்த மாதம் அல்லது இ.எம்.ஐ மூலம் செலுத்துவதாகும்.
20,000 ரூபாய் வரை பொருட்கள் வாங்கி அதற்கான பணத்தை இந்த வசதி மூலம் பின்னர் செலுத்தலாம்.
அமேசான் பே லேட்டர் வசதிக்கு பதிவு செய்வது எப்படி?
- முதலில் உங்கள் போனில் அமேசான் ஆப் பக்கம் சென்று உங்கள் ஐ.டி-யை லாக்கின் செய்யவும்.
2. வலப்புறத்தில் உள்ள 3 புள்ளி ஐகானை கிளிக் செய்து "Amazon Pay" என்பதை செலக்ட் செய்யவும்.
3. Amazon Pay ஆப்ஷனில் 'Amazon Pay Later Get started' என்பதை கொடுக்கவும்.
4. Amazon Pay Later பக்கத்தில் சைன்-அப் என்பதை கொடுக்கவும்.
5. இப்போது உங்கள் பான் எண், ஆதார் எண் கொடுத்து 'Agree & Continue.' செலக்ட் செய்யவும்.
6. அடுத்ததாக அமேசானுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், இ-மெயில் ஐ.டிக்கு ஓ.டி.பி அனுப்பபடும்.
7. அதை இதில் கொடுக்க வேண்டும். இப்போது அமேசான் பே லேட்டர் செட் அப் பதிவு செய்யப்படும்.
8. அடுத்ததாக உங்கள் cart அல்லது புதிதாக பொருட்கள் ஆர்டர் செய்யும் போது பேமெண்ட் மோட் பக்கத்தில் Amazon Pay Later ஆப்ஷன் கொடுத்து வாங்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“