/indian-express-tamil/media/media_files/j9iTOiTAFUeFxzDf9rfi.jpg)
கூகுளின் அம்சமான கூகுள் லென்ஸ் மிகவும் பயனுள்ள வசதியாகும். இதைப் பயன்படுத்தி எந்த புகைப்படம் மற்றும் தகவல்களையும் எளிதாக தேடலாம். அந்த படம் எங்கு பயன்படுத்தப்பட்டது, எந்த தருணத்தில் பயன்படுத்தப்பட்டது, எதற்கு பயன்படுத்தப்பட்டது என்ற அனைத்து தகவல்களையும் பெறலாம். இது சமயங்களில் போலி செய்திகளை கண்டறிய உதவுகிறது.
அந்த வகையில் குரோம் டெஸ்க்டாப்பில் கூகுள் லென்ஸ் எப்படி பயன்படுத்துவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
1. குரோம் பக்கத்தை ஓபன் செய்து, எந்த இமெஜை ஆய்வு செய்ய வேண்டுமே அதன் மீது ரைட்-கிளிக் செய்யவும்.
2. மெனு பார் வரும் அதில், ‘Search Image with Google என்பதை கிளிக் செய்யவும். இப்போது இதற்கான ரிசஸ்ட் உங்கள் வலப்புறத்தில் வரும். அதாவது அந்த படத்தைப் போன்ற Similar ஆன படங்கள் உங்களுக்கு காட்டப்படும்.
3. சர்ச் ரிசஸ்ட் படத்தை முழு இமெஜாக பார்க்க, படத்தின் கார்னரில் உள்ள expand பட்டனை கிளிக் செய்தால் புது டேப்பில் படம் காண்பிக்கப்படும்.
போட்டோவின் வலப்புறத்தில் கிளிக் செய்ய முடியவில்லை என்றாலும் empty area-வில் கிளிக் செய்து ‘Search Image with Google’ ஆப்ஷன் கொடுக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.