New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Google-Photos-Google.jpg)
Google Photos ‘Map View’
உங்கள் போன் கேமராவில் எடுக்கப்பட்ட படங்களை கூகுள் போட்டோஸ் மூலம் சேமித்து வைக்கலாம். அதோடு அதில் எடிட்ங் உள்பட பல்வேறு வசதிகளும் உள்ளன. இது பயனர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. கூகுள் நிறுவனத்தால் வழங்கப்படும் இந்த ஆப் புதிதாக பல அம்சங்களை சேர்த்து வருகிறது. அந்த வகையில் 'மேப் வியூ' அம்சம் பற்றி இங்கு பார்ப்போம். இந்த அம்சம் பயன்படுத்தி நீங்கள் எடுத்த போட்டோ எந்த லொக்கேஷனில் எடுக்கப்பட்டது என்பதை இது கணித்து காண்பிக்கும்.
'மேப் வியூ' அம்சம் எப்படி பயன்படுத்துவது?
Advertisment
- உங்கள் போனில் கூகுள் போட்டோஸ் ஓபன் செய்து கீழே உள்ள ‘Search’ ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- அடுத்து ‘Places’ கிளிக் செய்து ‘Your Map’கொடுக்கவும். இப்போது புதிய ஸ்கிரீன் ஓபன் செய்யப்படும்.
- இதில் உங்கள் போட்டோஸ் timeline காண்பிக்கப்படும். எங்கு எடுத்த படம் என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
- ஜியோடேக் செய்யப்பட்ட படங்கள் வரிசையாக காண்பிக்கப்படும்.
- blue bubbles கிளிக் செய்வதன் மூலம் எங்கு அந்த படம் எடுக்கப்பட்டது என்பது காண்பிக்கப்படும். அந்த இடத்தை
zoom out and zoom in செய்தும் பார்க்கலாம். - வலப்புறத்தில் உள்ள 3 டாட் மெனு கிளிக் செய்வதன் மூலம் புதிய ஸ்கிரீன் ஓபன் செய்யப்பட்டு அதில் நீங்கள் default, satellite and terrain வியூவிற்கு மாறலாம்.
- எந்த குறிப்பிட்ட இடத்தில் போட்டோ எடுக்கப்பட்டது என்பதை பார்க்க படத்தை ஓபன் செய்து, 3 டாட் மெனு கிளிக் செய்தால் லொக்கேஷன் பக்கத்தின் கீழ் அந்த படம் எங்கு எடுக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.