Private Wallpaper settings in Signal Tamil News : கஸ்டமைஸ்டு சாட் வால்பேப்பர்களை அமைக்க சிக்னல் இப்போது உங்களை அனுமதிக்கிறது. பயனர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்க வாட்ஸ்அப் சமீபத்தில் இந்த அம்சத்தை சேர்த்தது. வாட்ஸ்அப் பயனர்களுக்கு அதன் தனிப்பட்ட செய்தியிடல் பயன்பாட்டிற்கு மாறுவதற்கான காரணங்களை வழங்க சிக்னல் சின்ன அம்சங்களைக்கூட விட்டுவிடவில்லை என்று தெரிகிறது. இந்த செய்தியிடல் பயன்பாடு ஏற்கனவே சில சிறந்த தனியுரிமை அம்சங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அனிமேஷன் ஸ்டிக்கர்கள், மீடியா ஆட்டோ-டவுன்லோட் அமைப்புகள், முழுத்திரை சுயவிவர புகைப்படங்கள் மற்றும் பல அம்சங்களைச் சேர்க்கவும் இந்த தளம் திட்டமிட்டுள்ளது. இந்த அம்சங்களை வரும் நாட்களில் மக்கள் பெறுவார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் சமீபத்திய தனிப்பயன் சாட் வால்பேப்பர்கள் அம்சத்தைப் பெற்றுள்ளோம். இது எவ்வாறு தோற்றமளிக்கிறது மற்றும் செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம். இந்த அம்சம் வாட்ஸ்அப்பின் தனிப்பயன் சாட் வால்பேப்பர் செயல்படுவதைப் போன்றது. எனவே, இந்த அம்சத்தை நீங்கள் வாட்ஸ்அப்பில் முயற்சி செய்திருந்தால், அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது உங்களுக்குத் தெரியும். இதைப் பற்றி மேலும் அறியப் படிக்கவும்.
சிக்னல்: தனிப்பட்ட சாட்களுக்கு தனிப்பயன் வால்பேப்பரை எவ்வாறு அமைப்பது
ஸ்டெப் 1: உங்கள் தொலைபேசியில் சிக்னல் பயன்பாட்டைத் திறந்து ஏதாவதொரு நபரின் சுயவிவரத்தைப் பார்வையிடவும்.

ஸ்டெப் 2: பிறகு சாட் வால்பேப்பர் விருப்பத்தை க்ளிக் செய்ய வேண்டும். அது ‘அரட்டை வண்ணத்திற்கு’ கீழே உள்ளது. குறிப்பு: உங்களால் விருப்பத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், நீங்கள் இன்னும் இந்த அம்சத்தைப் பெறவில்லை என்று அர்த்தம். கவலைப்பட வேண்டாம், இது விரைவில் உங்கள் சாதனத்தை அடையும்.

ஸ்டெப் 3: இப்போது, ‘வால்பேப்பரை அமை’ என்பதை க்ளிக் செய்யவும். சில சாலிட் அல்லது கிரேடியன்ட் வண்ணங்களிலிருந்து நீங்கள் தேர்வுசெய்ய ஆப்ஷன் கிடைக்கும். கேலரியிலிருந்து புகைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பத்தையும் நீங்கள் பெறுவீர்கள். இதற்காக, நீங்கள் ‘புகைப்படங்களிலிருந்து தேர்வுசெய்க’ என்பதை க்ளிக் செய்யவேண்டும்.

ஸ்டெப் 4: இப்போது நீங்கள் ஒரு புகைப்படத்தைத் தேர்ந்தெடுத்ததும், புகைப்படங்களை மங்கச் செய்ய சிக்னல் ஒரு விருப்பத்தை வழங்கும். வால்பேப்பரின் ஒளி தீவிரத்தைக் கைமுறையாக சரிசெய்ய உங்களுக்கு விருப்பம் இருக்காது. சற்று மங்கலான வால்பேப்பருக்கு, புகைப்படத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு ‘டார்க் தீம் டிம்ஸ் வால்பேப்பரை’ க்ளிக் செய்யவும்.
சிக்னல்: சாட் செய்திகளின் நிறத்தை எவ்வாறு மாற்றுவது
இந்த அம்சம் தனிப்பயன் சாட் வால்பேப்பர்களிடமிருந்து வேறுபட்டது. ‘அரட்டை வண்ணம்’ என்று ஒரு விருப்பம் உள்ளது. இது பெறுநர்களின் செய்திகளின் நிறத்தையும் அரட்டையின் மேல் திரைப் பகுதியையும் மாற்ற உதவுகிறது. ‘அரட்டை வால்பேப்பர்’ விருப்பம் எந்த அரட்டையின் பின்னணியையும் மாற்றும். செய்திகளின் நிறத்தை எவ்வாறு மாற்றலாம் என்பதைப் பார்ப்போம்.

ஸ்டெப் 1: உங்கள் சாதனத்தில் சிக்னல் பயன்பாட்டைத் திறக்கவும்.
ஸ்டெப் 2: உங்கள் நண்பர்களின் சுயவிவரத்தைப் பார்வையிட்டு, ‘சாட் வண்ணம்’ என்பதைத் தட்டவும்.
ஸ்டெப் 3: உங்களுக்கு சில வண்ண விருப்பங்கள் கிடைக்கும். சேமிக்கும் பட்டன் இல்லாததால் வண்ணங்களில் ஒன்றைத் தேர்வுசெய்து உங்கள் தொலைபேசியில் பின் பட்டனை அழுத்தவும். அரட்டை சாளரத்தில் வேறு நிறத்தைக் காண்பீர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“