/tamil-ie/media/media_files/uploads/2023/06/WhatsApp-Express-Photo-1.jpg)
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் பெரும்பாலான மெசேஜிங் தளங்களில் புதிய Format ஆப்ஷன்கள் இருக்காது. ஆனால் வாட்ஸ்அப்-ல் 4 ஸ்பெஷல் கேரக்டர்ஸ் பயன்படுத்தலாம். கணினி, லேப்டாப்-ல் பயன்படுத்துவது போல் போல்ட், இடாலிக், ஸ்ட்ரைக்த்ரூ அல்லது மோனோ ஸ்பேஸ் (Bold, italic, strikethrough, or monospace) ஆப்ஷன்கள் பயன்படுத்தலாம்.
இதற்கு முதலில் வாட்ஸ்அப் பக்கம் செல்ல வேண்டும். italic பயன்படுத்த நீங்கள் எந்த வார்த்தையை italic செய்ய வேண்டுமே அந்த டெக்ஸ்ட்டின் முதல் மற்றும் கடைசி இடத்தில் underscore பயன்படுத்தவும். எ.கா ( _text_), டெக்ஸ்ட் bold செய்ய டெக்ஸ்ட்டின் முதல் மற்றும் கடைசி இடத்தில் asterisks பயன்படுத்தவும். எ.கா (*text*).
அடுத்ததாக, strikethrough அம்சம் பயன்படுத்த டெக்ஸ்ட்டில் tilde பயன்படுத்த வேண்டும் (~text~) செய்யவும். உங்கள் மெசேஜை monospace செய்ய 3 backticks செய்யவும். எ.கா ( “`text“`) இவ்வாறு பயன்படுத்தவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.