மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. சமீப காலமாக அதிக அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. இது பயனர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப் புதிய ஏ.ஐ பயன்பாட்டை அறிமுகம் செய்துள்ளது.
Advertisment
ஜெனரேட்டிவ் ஏ.ஐ மூலம் வாட்ஸ்அப்பில் நமக்கு வேண்டியது போல் கஸ்டம் ஸ்டிக்கர் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எப்படி பயன்படுத்துவது?
வாட்ஸ்அப் ஷேட் பக்கம் சென்று கீழே உள்ள ஸ்மைலி ஐகான் கிளிக் செய்து ஸ்டிக்கர் ஆப்ஷன் செல்லவும். அங்கு “Generate your own AI sticker” என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அதை கிளிக் செய்யவும்.
Advertisment
Advertisements
அடுத்து அதில், உங்களுக்கு வேண்டிய ஸ்டிக்கர் பெயரைக் குறிப்பிடவும். எ.கா “cat laughing on a skateboard” என்ற கொடுத்தால் ஆனிமேட்டேட் ஸ்டிக்கர் கிரியேட் செய்யப்படும். அவ்வளவு தான் இதை Save செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“