scorecardresearch

பிரைவேட் ஆடியன்ஸ், ரியாக்ஷன்ஸ்.. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட் வந்தாச்சு.. எப்படி பயன்படுத்துவது?

பிரைவேட் ஆடியன்ஸ், ரியாக்ஷன்ஸ் எனப் பல புதிய அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பிரைவேட் ஆடியன்ஸ், ரியாக்ஷன்ஸ்.. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட் வந்தாச்சு.. எப்படி பயன்படுத்துவது?

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. வாட்ஸ்அப் இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப் ஆகும். வாட்ஸ்அப் காலிங், வீடியோ கால், ஸ்டேட்டஸ் அம்சம் எனப் பல வசதிகள் உள்ளது.

நிறுவனம் பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஸ்டேட்டஸ் அம்சத்தில் புது அப்டேட் வெளியிட்டுள்ளது. வாய்ஸ் ஸ்டேட்டஸ், ஸ்டேட்டஸ் ரியாக்ஷன்ஸ், பிரைவேட் ஆடியன்ஸ் எனப் பல வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரைவேட் ஆடியன்ஸ் அம்சம்

தற்போது நீங்கள் பதிவிடும் ஸ்டேட்டஸ் அனைவரும் பார்க்கும்படி இருக்கும். தற்போது இந்த அம்சம் மூலம் யார் உங்கள் ஸ்டேட்டஸை பார்க்க வேண்டும் என்று நிர்வகித்துக் கொள்ளலாம். அதற்கு,

  1. முதலில் ஸ்டேட்டஸ் பேனலுக்குச் சென்று எப்போதும் போல் ஸ்டேட்டஸ் பதிவிடவும். அதன்பின் வலதுபுறத்தில் உள்ள
    floating action buttons கிளிக் செய்யவும்.
  2. நீங்கள் போட்டோ அல்லது வீடியோ எதை போஸ்ட் செய்ய விரும்புகிறீர்களோ? அதை போஸ்ட் செய்து
    இடப்புறத்தில் உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.
  3. “My Contacts”, “My contacts except” and “Only share with” ஆப்ஷன் பயன்படுத்தி செலக்ட் செய்யவும். அவ்வளவு தான், உங்களுடைய ரீசன்ட் செலக்ஷன் ஷேவ்வாகி விடும்.

வாய்ஸ் ஸ்டேட்டஸ்

போட்டோ, வீடியோவுடன் வாட்ஸ்அப் வாய்ஸ் ஸ்டேட்டஸ் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

  1. ஸ்டேட்டஸ் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அதில் floating action button கிளிக் செய்து பென்சில் ஐகானை கிளிக் செய்யவும் .
  3. இப்போது வலப்புறத்தில் கீழே மைக்ரோபோன் ஐகானை செலக்ட் செய்யவும்.
  4. அதை கிளிக் செய்து ரெக்கார்டு செய்யவும். 30 விநாடிகளுக்கு மேல் ரெக்காட்டு செய்ய முடியாது.
  5. ரெக்கார்டு செய்த பின் வலப்புறத்தில் கீழே உள்ள send ஐகானை கொடுத்து அனுப்பவும்.

ஸ்டேட்டஸ் ரியாக்ஷன்ஸ்

ஸ்டேட்டஸ் ரியாக்ஷன்ஸ் அப்டேட் அம்சம், ஸ்டேட்டஸ் அப்டேட்களை ஸ்வைப் அப் செய்து அதிகபட்சம் 8 எமோஜிக்களை பயன்படுத்தி ரியாக்ட் செய்யலாம். இது இன்ஸ்டாகிராமில் உள்ளதை போன்றே செயல்படுகிறது.

  1. எந்த ஸ்டேட்டஸ்ஸிற்கு ரியாக்ட் செய்ய விரும்புகிறீர்களோ, அதை ஓபன் செய்து கொள்ளவும்.
  2. அந்த ஸ்டேட்டஸ்ஸை ஸ்வைப் செய்து 8 எமேஜியில் ஏதோ ஒன்றை செலக்ட் செய்யவும்.
  3. இப்போது ஸ்டேட்டஸ் ரியாக்ஷன்ஸ் அனுப்பபட்டு விடும்.

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: How to use whatsapps new status features voice status private audience status reactions

Best of Express