ஐ.ஆர்.சி.டி.சி அங்கீகரிக்கப்பட்ட ரயில் உணவு விநியோக பார்ட்னரான ஜூப் நிறுவனம் புதிய கூகுள் சாட்போட்-ஐ (Chatbot) வெளியிட்டுள்ளது. இது ரயில் பயணிகள் உணவு ஆர்டர் செய்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. பி.என்.ஆர் எண் கொண்டு உணவு ஆர்டரை பயனர் டிராக் செய்து கொள்ளலாம்.
ஜூப் கூகுள் சாட்போட் எப்படி பயன்படுத்துவது?
- கூகுள் டேப் ஓபன் செய்யவும்.
- “ஜூப்” என டைப் செய்து என்டர் பட்டன் கொடுக்கவும்.
- “Chat with a live agent” ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- இப்போது உங்களுக்கு வேண்டிய தேவையை கிளிக் செய்யவும்.
- அடுத்து “Check PNR Status” என்பதை கிளிக் செய்யவும். பின் “Order Food” என்பதை கொடுத்து உணவு ஆர்டர் செய்யவும்.
- இப்போது உங்கள் விருப்ப படி உணவு ஆர்டர் செய்யலாம். ஸ்நாக்ஸ், கூல்டிரிங்ஸ் கூட ஆர்டர் செய்யலாம்.
- அவ்வளவு தான், எந்த ரயில் நிலையத்தில் வேண்டும் என்பதை செலக்ட் செய்து ஆர்டர் செய்து உணவு டெலிவரியை டிராக் செய்து
கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“