சமீபத்தில், 'எக்ஸ்' தளத்தில் , ஹிஜாப் அணிந்த பெண்கள் குழு இந்தியக் கொடியுடன் நடக்கும் வீடியோ பகிரப்பட்டு, பாலஸ்தீனத்தில் உள்ள முஸ்லிம்கள் மூவர்ணக் கொடியை ஏந்தியபடி அப்பகுதியை விட்டு வெளியேறுகிறார்கள். அவர்களின் கைகளில் மூவர்ணக் கொடியைப் பார்த்த பிறகு இஸ்ரேலியப் படைகள் பயங்கரவாதிகளை கொல்லவில்லை என்று பதிவில் எழுதப்பட்டிருந்தது. இது தவறான வீடியோ என்று பின்னர் உறுதிபடுத்தப்பட்டது.
A Reverse image search செய்யப்பட்டதில் அந்த வீடியோ ஈராக்கில் உள்ள Arbaeen Walk 2023-ன் போது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
फिलिस्तीन के मुसल्ले और मुसल्ली तिरंगे का उपयोग कर के फिलिस्तीन से निकल रहे हैं, क्यूंकि तिरंगा देख कर इजराइल नहीं मार रहा इन आतंकियों को
— Shalini kumawat ( हिन्द की नारी ) (@ShaliniKumawat0) October 14, 2023
अब भारत सरकार @PMOIndia @HMOIndia को ये सुनिश्चित करना है की ये सारे जिहादी भारत में ना घुसे, क्यूंकि यहाँ के जिहादी उन्हें पूरा समर्थन देंगे pic.twitter.com/NH24TeeMZ3
மற்றொரு வீடியோவில் மக்கள் பொதுவெளியில் உறங்குவது போன்ற வீடியோவில், “காசாவில் மட்டுமே நீங்கள் காணக்கூடிய காட்சி. காசா வாழ்க்கை. காசா உறுதி… – காசா 10/16/2023” என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில் அந்த வீடியோ லிஸ்பனில் ஆகஸ்ட் மாதம் உலக இளைஞர் தினத்தின் போது எடுக்கப்பட்டது.
A scene you will only see in Gaza 🇵🇸❤️
— राधा रानी (बरसाना ) (@KanhaRadhaRani) October 17, 2023
Gaza life. Gaza steadfastness...
- Gaza 10/16/2023#ZionistTerror #Gazagenocide #Gaza #IsraelGazaWar #PalestineGenocide #غزة_الآن. #ZionistTerror #Brussel #adp2023 #GazaCity #Bitcoin pic.twitter.com/mYqrGCQPRr
இவ்வாறாக சமூக வலைதளங்களில் போலி வீடியோக்கள் அதிகரித்து வருகின்றன. போலி வீடியோக்கள் மூலம் சில சமயங்களில் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. தவறான புரிதல், பொது அமைதிக்கு பாதிப்பு உள்ளிட்டவைகளுக்கு கூட வழிவகுக்கின்றன. அந்த வகையில் போலி வீடியோக்களை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Run reverse image search
எந்த வீடியோவின் நம்பகத்தன்மையை சரிபார்க்க முதல் படி அந்த வீடியோவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து, பின்
Run reverse image search செய்யவும். கூகுளில் Run reverse image search செய்ய சர்ச் பார் பக்கத்தில் உள்ள சிறிய கேமரா ஐகானைக் கிளிக் செய்து தேடும் படத்தின் URL பதிவிடவும் அல்லது ஸ்கிரீன்ஷாட்டைப் பதிவேற்றலாம். படம் மாற்றப்பட்டுள்ளதா அல்லது பழைய படம்/வீடியோ போலியான தலைப்புடன் பரப்பப்படுகிறதா என்பதைக் கண்டறிய இது உதவும். கூகுளில் எதுவும் கிடைக்கவில்லை என்றால் Yandex மூலம் செய்யலாம்.
Check for origin
பிற சமூக ஊடக தளங்களில் வீடியோ அல்லது படம் பதிவேற்றப்பட்ட சூழலை உள்ளடக்கிய பல்வேறு முடிவுகளை Run reverse image search உங்களுக்கு வழங்கும். நீங்கள் வீடியோவை வேறு எங்காவது கண்டால், தேதி, லொக்கேஷன் மற்றும் அதில் உள்ள ஹேஷ்டேக்குகளை சரிபார்க்கவும். இது வீடியோ எடுக்கப்பட்ட இடத்தை கண்டறிய உதவும்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/artificial-intelligence/social-media-videos-geolocation-verification-8993330/
Keyword search
வீடியோவின் இருப்பிடத்தைப் பற்றி ஏதேனும் க்ளூ கிடைத்தால், அதை வைத்து கூகுளில் தேடவும். லொக்கேஷனைக் கண்டறிய நம்பகமான ஊடக அறிக்கைகளைச் சரிபார்க்கவும்.
Use Google maps if needed
தேவைப்பட்டால் Google வரைபடத்தைப் பயன்படுத்தவும்: இருப்பிடத்தைப் பற்றி உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லை என்றால், Google வரைபடத்தைப் பயன்படுத்தி, வரைபடத்தில் இருப்பிடம் இருக்கிறதா என்று பார்க்கவும், செயற்கைக் கோள் படங்கள் மற்றும் street views. பயன்படுத்தி அடையாளங்களைச் சரிபார்க்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.