இனி உங்கள் இ.பி.எஃப் பாஸ்புக்கை ஈசியா டவுன்லோட் செய்யலாம்; இந்த ஒரு ஆப் இருந்தால் போதும்!

மக்கள் இப்போது UMANG செயலியைப் பயன்படுத்தலாம். இது பயனாளிகள் அனைவரும் தங்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதியை (இ.பி.எஃப்) கண்காணிக்க உதவுகிறது.

author-image
WebDesk
New Update
EPFO passbook

பணியாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்) என்பது நீண்ட கால ஓய்வூதிய சேமிப்புகளில் ஒன்றாகும். இதில் பணியாளரும், பணியளிப்பவரும் சமமான தொகையைச் செலுத்துகின்றனர். இது ஓய்வு பெறும்போது அல்லது பணியிடத்தை மாற்றும்போது பயன்படுத்தப்படுகிறது.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: How to view and download the EPF passbook on the UMANG app

 

Advertisment
Advertisements

இ.பி.எஃப்.ஓ போர்ட்டல், இ.பி.எஃப்.ஓ செயலி மற்றும் எஸ்.எம்.எஸ் போன்ற வசதிகளை தவிர்த்து தற்போது UMANG செயலியைப் பயன்படுத்தி தங்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குகளைக் கண்காணிக்க முடியும்.

இதனை எப்படி பயன்படுத்துவது என்பதை தற்போது காணலாம்:

1: UMANG செயலியை Google Play Store அல்லது Apple App Store இல் பதிவிறக்கம் செய்யலாம்

2: அடுத்த கட்டமாக முகப்புப் பக்கத்திற்குச் சென்று 'சேவைகள்' பகுதியைக் கண்டறிய வேண்டும்.

3: நீங்கள் ‘சேவைகள்’ பக்கத்தை அடைந்ததும், EPFO என்ற பிரிவை கண்டறியலாம்.

4: இப்போது ‘பாஸ்புக்கைக் காண்க’ என்பதைக் கிளிக் செய்யவும். இது உங்கள் உறுப்பினர் பாஸ்புக்கை அணுகவும், பதிவிறக்கவும் உதவும்.

5: UAN ஐ உள்ளிட்டு, OTP ஐ கிளிக் செய்து சமர்ப்பிக்கவும்.

6: இதில் பாஸ்புக்கைப் பார்க்கவும், பதிவிறக்கவும் உறுப்பினர் ஐடியை உள்ளிடவும்.

இனி, EPF/EPFO இருப்புடன் உங்கள் பாஸ்புக் திரையில் தோன்றும்

Epfo Balance Check Epf

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: