Advertisment

சந்தா இல்லாமல் சந்தோஷமாக ட்ரீம் 11 ஐபிஎல் 2020 பார்ப்பது எப்படி?

டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபியின் வருடாந்திர சந்தாவை ரூ.598 ஜியோ ரீசார்ஜ் திட்டத்துடன் செயல்படுத்த முடியும்.

author-image
WebDesk
New Update
tamil news today live, ipl 2020,

ஐ.பி.எல் 2020

IPL 2020 Live Streaming: ஐபிஎல் 2020 லைவ் ஸ்ட்ரீமிங்: ஐபிஎல் காரணமாக, டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவின் விலை ரூ.399-லிருந்து ஒரு வருடத்திற்கு ரூ.365-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Advertisment

செப்டம்பர் 19 முதல் ட்ரீம் 11 ஐபிஎல் மேட்ச் தொடங்கவுள்ளது. அதன் அனைத்து போட்டிகளும் டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் விஐபியில் ஒளிபரப்பப்படும். இதனைக் காண முதலில் நீங்கள் சந்தா திட்டத்தைப் பெற வேண்டும். விளம்பர சலுகையின் ஒரு பகுதியாக, டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா விலை முந்தைய 399 ரூபாயிலிருந்து ஒரு வருடத்திற்கு ரூ.365-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், நீங்கள் சந்தா திட்டத்தை வாங்க விரும்பவில்லை என்றால் கவலையே வேண்டாம். அதற்கு வேறு சில வழிகளும் உள்ளன. பின்வரும் திட்டங்களுடன் உங்கள் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ப்ரீபெய்ட் தொலைப்பேசி எண்ணை ரீசார்ஜ் செய்யுங்கள்.

ரூ.399 டிஸ்னி + ஹாட்ஸ்டார் வி.ஐ.பி:

பயன்பாட்டின் வருடாந்திர சந்தாவுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி வெறும் ரூ .399 விலையில் அசத்தலான திட்டத்தை வழங்குகிறது. ஐபிஎல் தொடரின் தடையற்ற அனுபவத்தோடு பாலிவுட்டின் ஹாட்ஸ்டார் சிறப்பு நிகழ்ச்சிகள், சிறந்த ஹாலிவுட் திரைப்படங்கள் என பிளாக்பஸ்டர் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் இதில் கண்டு மகிழலாம். இந்த சந்தா திட்டம் நிச்சயமாகப் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுப் போட்டிகளின் சிறந்த கலவையை வழங்கும்.

ரூ.401 ரிலையன்ஸ் ஜியோ திட்டம்:

ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.401 ரீசார்ஜ் திட்டத்தை வழங்கி வருகிறது. இதில், டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை இலவசமாகப் பெறுவது மட்டுமில்லாமல் 28 நாட்கள் வரை நீடிக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 3 GB அதிவேக இணைய டேட்டாவையும் பெறலாம்.

ரூ.598 ரிலையன்ஸ் ஜியோ திட்டம்:

டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபியின் வருடாந்திர சந்தாவை ரூ.598 ஜியோ ரீசார்ஜ் திட்டத்துடன் செயல்படுத்த முடியும். மேலும் இதைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு 56 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 2 GB அதிவேக இணைய டேட்டாவையும் கொடுக்கிறது ஜியோ.

ரூ.448 ஏர்டெல் திட்டம்:

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா வசதியை ரூ.448 மதிப்புள்ள ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் எளிதாகப் பெறலாம். மேலும், ஒரு நாளைக்கு 3 GB அதிவேக இணைய டேட்டா மற்றும் 28 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதிகளும் இதனோடு பெறலாம்.

ரூ.599 ஏர்டெல் திட்டம்:

599 ரூபாய் மதிப்புள்ள மலிவு ரீசார்ஜ் மூலம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபியின் வருடாந்திர சந்தாவைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கவிருக்கிறது ஏர்டெல். இந்தத் திட்டத்தின்மூலம் ஒரு நாளைக்கு 2 GB அதிவேக இணைய டேட்டா மற்றும் 56 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதிகளையும் பெற்று இந்த ஐபிஎல் தொடர்களைத் தடையில்லாமல் கிரிக்கெட் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Ipl Cricket Ipl News Hotstar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment