Apple iphone launch event ஆப்பிள் தலைமை நிறுவனம் அமைந்திருக்கும் கலிபோர்னியாவில் அந்நிறுவனத்தின் மிக முக்கியமான போன்கள் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. ஐபோன் வாடிக்கையாளர்கள் மத்தியில் இவை எப்படி வரவேற்பை பெறும் என்பது இனிதான் தெரிய வரும்!
Apple Event 2018 Live Updates: ஐபோனின் புதிய தயாரிப்புகளுக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்!
ஆப்பிள் ஐபோனுக்கு வாடிக்கையாளர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். எனவே அமெரிக்காவில் செப்டம்பர் 12 அன்று நடைபெற்ற ஆப்பிள் புதிய ரக போன்கள், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் ஐபேட் ஆகியன பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. இதன் விலை, சிறப்பம்சங்கள் ஆகியன வெளியாகின்றன.
Apple iPhone launch event
ஆப்பிள் பார்க் அலுவலகத்தில் இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வினை நேரலையாக ஐபோன் , ஐபேட், ஐபாட், மற்றும் மேக் போன்ற டிவைஸ்களில் வாடிக்கையாளர்கள் பார்த்தனர்.
விண்டோஸ் 10 பிசியில் எட்ஜ் ப்ரவ்ஸர் மூலமாகவும் நிகழ்வினை நேராக கண்டு களித்தனர். இந்திய நேரப்படி சரியாக இரவு 10.30 மணி அளவில் இந்த விழா துவங்கியது.
மூன்று ஐபோன் புதிய மாடல்கள் வெளியாகின. அவை முறையே ஐபோன் Xs, ஐபோன் Xr, ஐபோன் Xs Plus ஆகும். அதே போல் இந்த போன்களுடன் ஐபேட் ப்ரோஸ், புதிய மேக்புக் புரோ, மற்றும் ஆப்பிள் 4 வாட்ச் சீரியஸில் இரண்டு புதிய வாட்ச்கள் மற்றும் புதுமைப்படுத்தப்பட்ட ஏர்பாட்ஸ் வெளியாகின.
இது குறித்த லைவ் செய்திகளை ஆங்கிலத்தில் படிக்க
Apple iPhone launch event - லைவ் எப்படி நடந்தது? என்பது தொடர்பான தொகுப்பு
இதே நேரத்தில் க்யூபெர்டினோவை மையமாக கொண்ட நிறுவனம் ஐஓஎஸ் 12ன் அறிமுகம் பற்றியும் தெரிவிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியினை நேரடியாக காண கீழே இருக்கும் இணைப்பினை க்ளிக் செய்தால் போதுமானது.
இரவு 10.30 மணியில் லைவ் ஸ்ட்ரீமில் ஒவ்வொரு ப்ரோடக்டுகளின் அறிமுகம், சிறப்பம்சங்கள் மற்றும் இன்னபிற முக்கியமான தகவல்களையும் தெரிந்து கொள்ள இயலும்.
https://www.youtube.com/watch?v=KCsOZhwclEE
ட்விட்டரிலும் நேரலையில் ஆப்பிள் ஈவண்ட் : (Apple Launch Event 2018 September)
இன்று நடைபெறும் நிகழ்வினை ட்விட்டரில் பார்ப்பதற்கான அழைப்பினை தற்போது தன் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.
Join us September 12 at 10 a.m. PDT to watch the #AppleEvent live on Twitter. Tap ❤ below and we’ll send you updates on event day. pic.twitter.com/i9mGHTKhvu
— Apple (@Apple) 10 September 2018
ஆப்பிள் வாட்ச் 4னை அறிமுகப்படுத்த இருக்கும் ஆப்பிள் நிறுவனம்
புதிதாக ஐபோன்களை அறிமுகப்படுத்துவது மட்டுமல்லாமல் உடனே ஆப்பிள் வாட்ச்சின் 4வது சீரியஸ்ஸை வெளியிடுகிறது ஆப்பிள் நிறுவனம். இதற்கு முன்னதாக வெளியிடப்பட்ட மூன்று வாட்ச்களில் இல்லாத நிறைய சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது இன்று புதிதாக வெளியாகும் ஆப்பிள் வாட்ச் 4.
ஐபோன் Xsல் வருவதைப் போலவே பேசில் இல்லாத டிசைனைக் கொண்டிருக்கிறது இந்த வாட்ச். முந்தைய எடிசனில் வந்து கொண்டிருந்த பட்டன்களுக்குப் பதிலாக ஸ்போர்ட் சாலிட் ஸ்டேட் ட்ரைவ் பட்டன்களைக் கொண்டிருக்கிறது இந்த வாட்ச்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.