மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (ஜுன் 4) நடைபெற உள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. நாளை முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்படும். இந்நிலையில் இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைனில் தேர்தல் முடிவுகள், கள நிலவரம் குறித்து அறிந்து கொள்ள முடியும். உங்கள் தொகுதி முடிவுகளையும் இதில் தெரிந்து கொள்ள முடியும்.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் முடிவுகளை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.
ஆன்லைனில் எப்படி பார்ப்பது?
1. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளப் பக்கம் - results.eci.gov.in செல்லவும்.
2. general election results கிளிக் செய்யவும்.
3. உங்கள் மாநிலம், தொகுதியை செலக்ட் செய்யவும் .
4. இப்போது முடிவுகள் காண்பிக்கப்படும். யார் உங்கள் தொகுதியில் முன்னிலையில் உள்ளார். எத்தனை வாக்குகள் முன்னிலை என்ற அனைத்து விவரங்களும் காண்பிக்கப்படும்.
அதோடு, தேர்தல் ஆணையத்தின் Voter helpline என்ற ஆப் மூலமும் தேர்தல் முடிவுகளை அறியலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“