இந்தியாவில் யு.பி.ஐ டிஜிட்டல் பரிவர்த்தனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற யு.பி.ஐ பயன்படுத்தும் தளங்கள் உள்ளன. இதன் மூலம் எளிதாக மற்றவர்களுக்கு பணம் அனுப்பலாம், பெறலாம் அதே சமயம் உங்கள் மளிகை சாமான் பில் முதல் விமானம் புக் செய்வது வரை அனைத்தையும் செய்யலாம்.
இந்நிலையில், யு.பி.ஐ பயன்படுத்தி ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க கூடமுடியும். பொதுவாக யு.பி.ஐ பயன்படுத்தி பணம் டெபாசிட் செய்வது பற்றி அறிந்திருப்போம். ஆனால் எப்படி பணம் எப்பது என்று பார்ப்போம்.
- ஏ.டி.எம் சென்று cash withdrawal ஆப்ஷன் கொடுக்கவும்.
2. இப்போது ஸ்கீரில் யு.பி.ஐ ஆப்ஷன் செலக்ட் செய்யவும்.
3. ஏ.டி.எம் திரையில் QR code ஒன்று வரும்.
4. இப்போது உங்கள் போன் எடுத்து கூகுள் பே, போன் பே சென்று QR code-ஐ ஸ்கேன் செய்யவும்.
5. இதன் பின் எவ்வளவு எடுக்க வேண்டுமோ அந்த தொகையை உள்ளிடவும். 6. யு.பி.ஐ பின் நம்பரை உள்ளிடவும். இப்போது ஏ.டி.எம்-ல் பணம் வரும் பெற்றுக் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“