மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. வாட்ஸ்அப் பல நாடுகளில் பயன்படுத்தும் இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப் ஆகும். பயனர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்குகிறது. அந்தவகையில் வாட்ஸ்அப் மூலம் பிறருக்கு உங்கள் லைவ் லொகேஷன் (நீங்கள் இருக்கும் இடம்) குறித்த தகவலை சேர் செய்யலாம். இது மிகவும் பயனுள்ள ஒரு அம்சமாகும். வாட்ஸ்அப் லைவ் லொகேஷன் சேர் செய்வது குறித்து பார்க்கலாம்.
5 சிம்பிள் ஸ்டெப்ஸ்
- முதலில் உங்கள் போனில் வாட்ஸ்அப் ஓபன் செய்யவும்.
- இப்போது யாருக்கு லைவ் லொகேஷன் சேர் செய்ய வேண்டுமோ அவர்களின் சேட் பக்கத்திற்கு செல்லவும். அங்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Attach ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- இப்போது அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் Location ஆப்ஷனை கிளிக் செய்து, Share live location கொடுக்கவும்.
- அடுத்ததாக எவ்வளவு நேரம் லொகேஷன் பகிர வேண்டும் என்பதை செலக்ட் செய்து ஓகே கொடுக்கவும்.
- அவ்வளவு தான் லொகேஷன் பகிரப்படும். இதில் வேண்டுமானால் டெக்ஸ்ட் டைப் செய்து அனுப்பலாம்.
லொகேஷன் சேர் நிறுத்துவது எப்படி?
அதேபோல் வாட்ஸ்அப் பக்கத்திற்கு சென்று, சேட் பக்கத்திற்கு செல்லவும். அங்கு சென்று Stop sharing live location என்று கொடுத்து பின்னர் STOP கொடுக்கவும். இப்போது உங்கள் லொகேஷன் சேர் செய்வது நிறுத்தப்படும்.
வாட்ஸ்அப் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் கொண்டது. எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதி கொண்டதால் நீங்கள் லொகேஷன் பகிர்ந்த நபர்களைத் தவிர வேறு யாரும் உங்கள் லொகேஷனை பார்க்க முடியாது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/