ஹூவாய் நோவா 3 கேமரா : விளம்பரத்தை காட்டி ஏமாற்றும் வேலையா?

விளம்பரத்தில் காட்டப்படும் கேமரவை நம்பி விலையுர்ந்த ஸ்மார்ஃபோன்களை வாங்குபவர்கள்

விளம்பரத்தில் காட்டப்படும் கேமரவை நம்பி விலையுர்ந்த ஸ்மார்ஃபோன்களை வாங்குபவர்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஹூவாய் நோவா 3

ஹூவாய் நோவா 3 விளம்பரம்

மொபைல் பிரியர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த ஹூவாய் நிறுவனத்தின் நோவா 3 ஸ்மார்ட்ஃபோன் கேமரவின் விளம்பரம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

ஏமாற்றும் விளம்பரங்கள்:

Advertisment

மொபைல் உலகமாக மாறிப்போன இந்த தொழில் நுட்ப உலகில் சந்தையின் நாள்தோறும் புதிய ரக ஃபோன்கள் விற்பனைக்கு வந்து செல்கின்றன. இந்திய நிறுவனம் தொடங்கி சீன நிறுவனம் வரை பல்வேறு நிறுவனங்களில் ஃபோன்களை பொதுமக்கள் அதிகளவில் விரும்புகின்றனர்.

முன்பெல்லாம் மொபைல் என்றால் ஃபோன் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அதன் பின்பு எஸ்எம்எஸ் தேவைக்கு உருமாறியது. காலப்போக்கில் ஸ்மார்ட்ஃபோன்கள் உருவெடுக்க ஆரம்பித்த உடன் வாட்ஸப், ஃபேஸ்புக் போன்ற செயலிகளின் தேவைக்காக நிறைய ஃபோன்கள் சந்தையில் குதித்தன.

ஆனால், தற்போது ஸ்மார்ஃபோன்கள் என்றால் அது செல்ஃபீக்காக மட்டுமே என்ற நிலைக்கு தள்ளபபட்டுள்ளது. பொதுமக்களும் ஒரு ஃபோனின் கேமரா தரத்தை வைத்தே விருப்பமான ஃபோனை தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த மாற்றத்தை புரிந்துக் கொண்ட மொபைல் நிறுவனங்களும் கேமராவை வைத்தே ஃபோன்களை விளம்பரம் செய்ய இறங்கிவிட்டனர்.

Advertisment
Advertisements

ஆனால், இந்த விளம்பரத்தைக் கண்டு மக்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள், என்பது சில காலம் முன்பு நோக்கியா லூமியா 920 மாடலின் விளம்பரத்தில் மக்கள் புரிந்துக்கொண்டனர். இந்த மொபைல் ஃபோனுக்கான விளம்பரத்தில் மாடல் ஒருவர் சைக்கிள் ஓட்டி செல்வார்.

அவரை அந்த மொபைலில் படம் எடுக்கும் போது எப்படியெல்லாம் அவர் கேமிராவில் அழகாக தெரிகிறார் என்று காட்சிப்படுத்தும் வகையில் ஒரு விளம்பர வெளியானது. ஆனால், உண்மையில் அந்த ஃபோட்டோக்கள் டிஎஸ்எல்ஆர் கேமிராவில் எடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் அந்த வீடியோவிலியே இடம் பெற்றிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

ஹூவாய் நோவா 3 விளம்பரம் :

இந்நிலையில், தற்போது ஹூவாய் நிறுவனத்தின் நோவா 3 ஸ்மார்ட்ஃபோன் விளம்பரமும் நோக்கியா லூமியா போன்ற ஒரு ஏமாற்ற வேலைத்தான் என்று சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. கடந்த மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட நோவா 3 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் FHD பிளஸ் 19:5:9 ரக டிஸ்ப்ளே, கிரின் 970 சிப்செட், GPU சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் 16 எம்பி பிரைமரி கேமரா, 24 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் செல்ஃபிக்களை எடுக்க 24 எம்பி மற்றும் 2 எம்பி செல்ஃபி கேமரா யூனிட் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறபட்டது. இந்நிலையில் இந்த ஸ்மார்ஃபோனின் விளம்பரத்தில் காட்டப்பட்டுள்ள அனைத்து காட்சிகளும் டிஎஸ்எல்ஆர் கேமிராவில் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

ஹூவாய் நோவா 3 டிஎஸ்எல்ஆர் கேமிராவில் புகைப்படம் எடுக்கும்போது பதிவாகும் முகக்குறி

அரேபிய மொழியில் வெளிவந்திருக்கும் இந்த விளம்பரத்தில், இதற்கான ஆதரங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த விளம்பரக்த்தில் மாடல்கள் இருவரும், கேமிராவில் இடம்பெற்றிருக்கும் சிறப்பு அம்சங்களை வெளிப்படும் வகையில் வித விதமான செல்பிக்களை எடுப்பார்கள். அப்போது கண்ணாடியில் எடுக்கும் செல்பியில் இந்த காட்சிகள் பதிவாகி இருக்கின்றன.

மொத்தத்தில் விளம்பரத்தில் காட்டப்படும் கேமரவை நம்பி விலையுர்ந்த ஸ்மார்ஃபோன்களை வாங்குபவர்கள் இனிமேல் கவனத்துடன் இருப்பது நல்லது.

Nokia Huawei

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: