Huawei Foldabale Smartphone to showcase at MWC 2019 : ஹூவாய் நிறுவனத்தின் ஃபோல்டபிள் போன் இன்று மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில் அறிமுகம். ஸ்பெய்ன் நாட்டில் இருக்கும் பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில் புதிய போன்கள் அறிமுகம் செய்வது வழக்கம். அவ்வகையில் ஹூவாய் நிறுவனத்தின் ஃபோல்டபிள் போனை அறிமுகம் ஆகிறது.
Huawei Foldable Smartphone to showcase at MWC 2019
இந்நிகழ்வு சரியாக 2 மணிக்கு நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மாலை 06:30 மணிக்கு இந்த போன் அறிமுகமாகிறது. ஹூவாய் நிறுவனத்தின் இந்த போன் அறிமுகவிழாவை வாடிக்கையாளர்கள் நேரடியாக அவர்களின் அதிகாரப்பூர்வ இணையத்தின் வாயிலாகவும், ஃபேஸ்புக் பேஜ் மூலமாகவும், யூடியூப் சேனல் வழியாகவும் பார்வையிடலாம்.
நேற்று ஹூவாய் நிறுவனத்தின் ஃபோல்டபிள் போன் என்று மேட் எக்ஸ் என்ற ஸ்மார்ட்போனின் போஸ்டர் ஒன்று லீக் செய்யப்பட்டது. அறிமுகமாக இருக்கும் போனும் கூட அதுவாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. அந்த போஸ்டரில் 5ஜி தொழில்நுட்பத்துடன் வரும் ஃபோல்டபிள் போன் மேட் எக்ஸ் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
#Huawei #MWC2019 #MWC19 huawei Mate X pic.twitter.com/cUV7POgF6r
— 红军第十九冠 (@gimme2pm) 22 February 2019
லீக்கான தகவலின் படி 7.2 இன்ச் திரை அளவு கொண்ட போன், ஹூவாய் நிறுவனத்தின் கிரின் 980 ப்ரோசசர், பேலாங் 5000 மோடம் ஆகிய சிறப்பம்சங்கள் அதில் இடம் பெற்றிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
புதன் கிழமைதான் உலகின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து வைத்தது சாம்சங் நிறுவனம். அதனைத் தொடர்ந்து ஹூவாய் நிறுவனமும் களம் இறங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து சியோமி நிறுவனமும் இந்த வடிவமைப்புகளுடன் கூடிய போன்களை அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : தொழில்நுட்பத்துறையில் சாம்சங் நிறுவனத்தின் போல்டபிள் போன் ஒரு மைல்கல்