Huawei Foldable Phone : ஹூவாய் நிறுவனம் தற்போது மிகவும் உயர் ரக செல்போன்களை தயாரித்து ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு சவாலாக அமைந்து வருகிறது. ஸ்மார்ட்போன்களின் பயன்பாட்டினை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக ஃபோல்டபல் எனப்படும் நெகிழ்வுத் தன்மை மிக்க போன்களை அடுத்த வருடம் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
Huawei Foldable Phone எப்படி இருக்கும் ?
மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியத்தின் வாடிக்கையாளர்கள் மைய அதிகாரியாக செயல்பட்டு வரும் ஜீனே ஜியாவ் இது குறித்த தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிற்காக பிரத்யேக பேட்டி அளித்த ஜீனே ஜியாவ் ஃபோல்டபல் போன்கள் ட்ரெண்ட் கிடையாது. ஆனால் அதுவே ரியாலிட்டி என்று கூறுயிருக்கிறார். இந்த போன் பற்றிய சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் எதையும் வெளியிடாத நிலையில் அவர், தற்போது பயன்பாட்டில் இருக்கும் எந்த போன்களுக்கும் மாற்றாக அந்த போன்கள் களம் இறங்காது. அது தன்னுடைய தனித்துவத்தில் சிறந்து விளங்கும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்,
மேலும் படிக்க : ஹூவாய் நிறுவனத்தின் மேட் 20 ப்ரோ போன் எப்படி இருக்கிறது ?
இது நாள் வரை ஃபோல்டபல் போன்கள் குறித்து அங்கொன்றும் இங்கொன்றுமாக தகவல்கள் வெளியான வண்ணம் தான் இருக்கின்றன. ஆனால் முறையான போன்களை நாம் கண் கொண்டு காணவில்லை. இது போன்ற போன்களை உருவாக்குவது அவ்வளவு எளிமையான விசயம் இல்லை. இதற்கான தொழில்நுட்பங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
ஹூவாயால் உருவாக்கப்பட்டு வரும் இந்த ஃபோல்டபல் போன் கூகுளிலின் ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தை மையமாக கொண்டு செயல்படும் EMUIயால் இயங்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.