Advertisment

இந்தியாவிற்கு வருகிறது ஹூவாய் மேட் 20 ப்ரோ... டிசம்பர் 3ல் இருந்து விற்பனை

எமரல்ட் க்ரீன், மிட்நைட் ப்ளூ, ட்விலைட், பிங்க் கோல்ட், மற்றும் கறுப்பு நிறங்களில் வெளியாகிறது இந்த போன்...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Huawei Mate 20 Pro India

Huawei Mate 20 Pro India

Huawei Mate 20 Pro India : ஆக்டா கோர் 7nm கிரின் 980 ப்ரோசசர் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஹூவாய் நிறுவனத்தின் மேட் 20 ப்ரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் லண்டனில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது. அமேசான் இந்தியாவில் இந்த போனின் ரூ.69,990 ஆகும். (6 ஜிபி / 128 ஜிபி).

Advertisment

மேலும் படிக்க : அல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ

Huawei Mate 20 Pro India : இந்தியாவில் விற்பனை மற்றும் அறிமுக சலுகைகள்

டிசம்பர் 3ம் தேதி நள்ளிரவு முதல் ஹூவாய் மேட் போன்கள் அமேசான் இணைய தளத்தில் விற்பனைக்கு வருகிறது. டிசம்பர் 3ம் தேதி ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கும், 4ம் தேதி சாதாரண வாடிக்கையாளர்களுக்கும் விற்பனை ஆரம்பமாகிறது.

ஹூவாய் மேட் 20 போன் வாங்கும் போது PXC 550 ஹெட்போனை இலவசமாக வழங்குகிறது. அமேசான் இணைய தளத்தில் ரூ. 71,990க்கு விற்பனையாகிறது.

க்ரோமா ஸ்டோர்களில் டிசம்பர் 10ம் தேதி முதல் ஹூவாய் மேட் 20 விற்பனைக்கு வருகிறது. வோடாபோன் மற்றும் ஐடியா நெட்வொர்க்களுடன் டையப் வைத்திருக்கும் ஹூவாய் போஸ்ட்பெய்ட் ப்ளான்களில் 20% வரை சலுகைகள் அளிக்க உத்தரவிட்டிருக்கிறது.

ஹூவாய் மேட் 20 ப்ரோ (Huawei Mate 20 Pro India) சிறப்பம்சங்கள்

மூன்று பின்பக்க கேமராக்களுடன் அசத்தலாக வெளிவருகிறது இந்த போன். லெய்க்கா நிறுவனத்தின் கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. வேறெந்த போன்களிலும் இல்லாத அளவு ஒரு அல்ட்ரா வைட் கேமரா ( 20MP, 16mm, f/2.2 ), வைட் ஆங்கிள் கேமரா (40MP, 27mm, f/1.8 ), மற்றும் டெலிபோட்டோ கேமரா ( 8MP, 3x Telephoto 80mm, f/2.4, OIS) கொண்டிருக்கிறது. செல்பி கேமரா 24 எம்.பி ( f/2.0 ) திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Huawei Mate 20 Pro price, specifications, Huawei Mate 20 Pro review Huawei Mate 20 Pro

6.39 அங்குல அளவுள்ள இந்த போனின் திரை OLEDயால் உருவாக்கப்பட்டிருக்கிறது. டிஸ்பிளே ஃபார்மட் 19.5:9 ஆகும். இதன் ரெசலியூசன் 2K+ டிஸ்பிளேயுடன் கூடிய 3120×1440 பிக்சல்களைக் கொண்டிருக்கிறது.

4200mAh பேட்டரி திறன் கொண்டிருக்கிறது. மேலும் ஹூவாயின் 40W சூப்பர்சார்ஜ் சார்ஜர் இதனுடன் வருகிறது.

எமரல்ட் க்ரீன், மிட்நைட் ப்ளூ, ட்விலைட், பிங்க் கோல்ட், மற்றும் கறுப்பு நிறங்களில் வெளியாக இருக்கிறது இந்த போன்.

Huawei
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment